ராஜ்யசபா-தயாநிதி, யெச்சூரி வாக்குவாதம்
டெல்லி:
தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே நாட்டின் பல பகுதிகளில்பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவன செல்போன் சிக்னல் டவர்களைநிறுவ அரசு தயங்குவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரிராஜ்யசபாவில் குற்றம் சாட்டியதால், அவருக்கும்,மத்திய தொலைத் தொடர்புத்துறைஅமைச்சர் தயாநிதி மாறனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
யெச்சூரி பேசுகையில், நாட்டின் பல பகுதிகளில் பி.எஸ்.என்.எல். மற்றும்எம்.டி.என்.எல். நிறுவன செல்போன்களுக்கு தேவையான சிக்னலை தடையின்றிகொடுக்க போதுமான தொலைத்தொடர்புகோபுங்கள் அமைக்கப்படவில்லை.இதனால் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக அரசு செயல்படுகிறதாஎன்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.இதைக் கேட்டதும் அமைச்சர் தயாநிதி தமாறன் எழுந்து கோபமாக பதிலளித்தார்.யெச்சூரியின் கேள்வி, மிகவும் நேர்மையற்றது. பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல்.ஊழியர்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் இக்கேள்வி உள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட யெச்சூரி, நானும் ஒரு தொழிலாளர் சங்க உறுப்பினர்தான். நான்எப்படி ஊழியர்களின் மன உறுதியைக் குலைக்க முடியும்.
ஊழியர்கள் அரசுக்காகத்தான் வேலை செய்கின்றனர். அமைச்சருக்காக அல்ல.
டவர்களை அமைக்காமல் தவிர்ப்பதாக தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்கள்தான்அரசின் மீது குறை கூறுகிறார்கள். அவர்கள் சார்பில் தான் நான் இங்கே இந்தப் புகாரைகூறிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
அதற்கு மிகவும் கோபமாக பதில் கூற எழுந்தார் தயாநிதி மாறன். இதைப் பார்த்த மூத்தகாங்கிரஸ் உறுபபினர் கரன் சிங் உள்ளிட்டோர் தயாநிதி மாறனைசமாதானப்படுத்தினர்.
அப்போது யெச்சூரிக்கு ஆதரவாக இடதுசாரி உறுப்பினர்கள் எழுந்து கோஷமிட்டனர்.இதையடுத்து பிரதமருக்கு அருகில் அமர்ந்திருந்த நாடாளுமன்ற விவகாரத்துறைஅமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி எழுந்து தயாநிதியிடம் ஓடி வந்து நிதானமாகபேசுமாறு அறிவுறுத்தினார்.
அப்போது சிபி.எம். உறுப்பினர் பிருந்தா காரத் எழுந்து, யெச்சூரி கேட்ட கேள்விக்குபதில் என்ன? என்றுமீண்டும் கேட்கவே சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
ஆனால், வேறு கேள்விக்கு பதில் அளிக்கத் தொடங்கினார் தயாநிதி மாறன்.
முன்னதாக மாறன் பேசுகையல், பி.எஸ்.என்.எல். நிறுவன செல்போன்இணைப்புகளை விரிவுபடுத்தும் வகையில், 63.5 மில்லியன் இணைப்புகள் வழங்கடெண்டர் விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனியார் துறையினர் வசம் உள்ள இணைப்புகளுக்கு இணையாகஅடுத்த 3ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல். நிறுவன செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கைஉயர்ந்து விடும்.
இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, தரத்திலும் கூடுதல் கவனம்செலுத்தபப்டும் என்றார்மாறன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications