இட ஒதுக்கீடு- மத்திய அரசு, ப.சி, மொய்லி மீது ராமதாஸ் கடும் பாய்ச்சல்
கடலூர்:
உயர் கல்வியில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு விவகாரத்தில் நிதியமைச்சர்ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி ஆகியோர் பெரும் துரோகம் இழைத்து விட்டனர்.வீரப்ப மொய்லி தமிழகத்திற்கு வந்தால் அவருக்கு கருப்புக் கொடி காட்டிவிரட்டுவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கடலூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் ராமதாஸ் பேசுகையில், 27சதவீத இட ஒதுக்கீட்டை 3 ஆண்டுகளுக்குப் பிரித்து அமலாக்கும் க் கொடுக்கும்மத்திய அரசின் முடிவை மிகக் கடுமையா கவிமர்சித்தார்.அவரது பேச்சு விவரம்:
நாட்டில் உள்ள 100 கோடிமக்களில் 60 கோடி பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்கள். ஆனால் 5 சதவீதமே உள்ளவர்கள் 77.5 சதவீதத்தை அனுபவித்துவருகிறார்கள். 3 வருடத்தில் 27 சதவீதத்தை கொடுப்பதாக கூறினார்கள்.
இதுகுறித்து டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் கூடிப்பேசினோம். சோனியா அம்மையார் உள்பட அனைவரும் வந்திருந்தார்கள். எனக்குஅப்போது ஆத்திரம் வந்தது. ஆனால் சோனியா அம்மையார் என்னை ஆத்திரப்படவேண்டாம், மாலையில் பேசலாம் என்று அமைதிப்படுத்திவிட்டார்.
மாலையில் பேசினோம். 2 மணி நேரம் பேசினோம். இந்த ஆண்டு 27 சதவீதம்கொடுக்க முடியாது, அடுத்த ஆண்டு கொடுக்கலாம் என்று தீர்மானம் போட்டார்கள்.
மாட்டுக்கார வேலனைப் (லாலு பிரசாத் யாதவ்?) போய்ப் பார்த்தேன். அவர் மேல்வழக்கு உள்ளது. அவரை வாய் திறக்கமுடியாதபடிக்கு ஆக்கிவிட்டார்கள். வடஇந்தியாவில் இதைத் தட்டிக் கேட்க ஆளே இல்லை.
நேற்றுமுன் தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் 3 வருடத்திற்கு 27 சதவீதம்என்றார்கள். அதிலும், வருடத்திற்கு ரூ. 1 லட்சத்திற்கு மேல் வருமானம்உள்ளவர்களின் பிள்ளைகளுக்குக் கிடையாது என்கிறார்கள்.
கிரீமி லேயர் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியுள்ளனர். அப்போதுடி.ஆர்.பாலுவும், அன்புமணியும் கொதித்துப் போய் விட்டனர். வாதாடினார்கள்.ஆனாலும் முடியவில்லை. சட்ட அமைச்சர், அவர்தான் கிரீமி லேயரின் பிதாமகன்ஆவார். நமக்கு ஆதரவாக அந்துலே பேசினார். ஆனால் மாட்டுக்கார வேலன்பேசவில்லை. வேறு யாரும் பேசவில்லை.
ஏன் ப.சிதம்பரமே கூட பேசவில்லை. அவர் தமிழர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கும் துரோகம் இழைத்துவிட்டார். வீரப்ப மொய்லி மிக மிகபிற்படுத்தப்பட்டவர். அவரை ஓவர் சைட் கமிட்டியில் தலைவராக போட்டனர்.அவரோ முன்னேறிய சாதிப்பக்கம் சாய்ந்து விட்டார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் கழித்துக் கொடுக்கலாம் என்று இவர்சொன்னால் அதற்கு தகுந்த சன்மானம் அவருக்குக் கிடைக்கும். தமிழகத்திற்குவரட்டும், கருப்புக் கொடி காட்டிவிரட்டுவோம். விரட்டவேண்டும்.
இந்த பண்ருட்டியார் எதற்காகவாவது கவலைப்பட்டாரா? இந்த சமுதாய(வன்னியர்கள்) மக்களுக்கு எதையாவது செய்துள்ளாரா?அண்ணாவைஏற்றுக்கொண்டார். பின்னர் கருணாநிதியையும் ஏற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரையும்ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதாவையும் ஏற்றுக் கொண்டார். இப்போது ஒருவர்(விஜய்காந்த்) பக்கம் போயுள்ளார். இது அவருக்கே அசிங்கமாக இல்லை?
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில13 தொகுதகிளில் நாம் ஏன் தோற்றோம்? ஆனால்காங்கிரஸ்34 தொகுதிகளில் ஜெயிக்கிறது. ஆனால் பாமக மட்டும் ஏன் வெற்றிபெறவில்லை. கூட்டணி தர்மத்தை வன்னியர்கள் முழுமையாகக்கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் இந்தக் கூட்டணியில் நாம் 13 தொகுதிகளில்தோற்றுவிட்டோம்.
இந்த நிலை உள்ளாட்சித் தேர்தலில் ஏற்படக் கூடாது. அனைவரும் விழிப்புடன்இருக்க வேண்டும்.
இன்று சினிமாவா எடுக்கிறார்கள். ஒரு பெண்ணை 10 பேர் உருட்டைக்கட்டைகளுடன் துரத்துகிறாரக்ள். கேட்டால் இது எதார்த்தம் என்கிறார்கள். கூத்து,பாட்டு, குத்துப்பாட்டு, சண்டை, மசாலா காட்சிகளைபோட்டு படம் எடுக்கிறார்கள்.எதார்த்தத்தை படம் எடுப்பதாக கூறுகிறாரக்ள். இதை நான் விமர்சித்தால் என்னைமாரல் போலீஸா என்கிறார்கள்.
ஆமாய்யா, நான் மாரல் போலீஸ் தான் என்று ஆவேசமாக பேசினார் ராமதாஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications