கேப்டன் படம் காட்டி பாடம் எடுத்த போலீஸ்அதிகாரிகள்-நடவடிக்கை எடுக்க டிஐஜி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

விஜயகாந்த் போலீஸ் வேடத்தில் நடித்த படத்தைப் போட்டுக் காட்டி, போலீஸ்அதிகாரி என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று போலீஸாருக்கு அறிவுரைவழங்கிய மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு சரகடிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் புல்லக்கோட்டை சாலையில் உள்ள கல்யாண மண்டபத்தில்,காவல்துறை-பொதுமக்கள் நன்மதிப்பு திட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது.இதில் ஏராளமான போலீஸார் கலந்து கொண்டனர். மாவட்ட எஸ்.பி.செந்தில்குமார்,டிஎஸ்பி சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பொதுமக்களிடம் போலீஸார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்டபல அறிவுரைகளை அதிகாரிகள் கூட்டத்தில் வழங்கினர். அப்போது ஓ.எச்.பி. எனும்புரொஜக்டர் மூலம் நடிகர்கள் விஜயகாந்த், சூர்யா உள்ளிட்டோர் காவல்துறைஅதிகாரிகளாக நடித்த படத்தின் கிளிப்பிங்குகளை போட்டுக்காட்டி, மீசையை இப்படிமுறுக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.

லத்தியை எப்படிப் பிடிக்க வேண்டும். ஷூ எப்படி பளிச்சென இருக்க வேண்டும்.இங்கே பாருங்கள் விஜயகாந்துக்கு தொப்பை இல்லை, இப்படிதான் இருக்கவேண்டும். எப்படி கம்பீரமாக நடக்கிறார் பாருங்கள், பொதுமக்களிடம் எப்படிப்பேசுகிறார் பாருங்கள் என்று விஜயகாந்த்தையம், சூர்யாவையும் காட்டி போலீஸார்எப்படி நடந்தகொளள வேண்டும் என்று விளக்கியுள்ளனர்.

இப்படி சினிமா போலீஸை காட்டி, இப்படித் தான் நிஜ போலீஸார் நடந்து கொள்ளவேண்டும் என்று உயர் அதிகாரிகள் பாடம் நடத்தியது காவல் துறையில் பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மதுரைசரக டிஐஜி செண்பகராமன் உத்தரவிட்டுள்ளார்.

சினிமாக் காட்சிகளுக்க ஏற்பாடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா:

இந் நிலையில் விஜயகாந்த் தனது 55வது பிறந்த நாளை விருத்தாச்சலம் தொகுதியில்பிரமாண்டமாக கொண்டாடவுள்ளார்.

விஜயகாந்த்துக்கு நாளை 54 வயது முடிந்து 55 வயது பிறக்கிறது. கடந்த பலஆண்டுகளாகவே பிறந்த நாளைக் கொண்டாடமல் இருந்த விஜயகாந்த், இந்த முறைதனது கட்சியினரின் கோரிக்கையை ஏற்று வறுமை ஒழிப்பு நாளாககொண்டாடவுள்ளார்.

தான் போட்டியிட்டு வென்ற விருத்தாச்சலத்தில் பிறந்த நாள் கொண்டாடுகிறார்விஜயகாந்த். இதையொட்டி ரத்ததானம், கண்தானம், இலவச வேட்டி, சேலை,நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குதேமுதிக ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பிறந்த நாளை தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தட புடலாககொண்டாட தேமுதிகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். தனது பிறந்த நாளையொட்டிஇந்த ஆண்டு ரூ. 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஏழைகள், மாணவ,மாணவியருக்கு வழங்கவிருப்பதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+