எம்பியை அடிக்க பாய்ந்த லாலுவின் மச்சான்
டெல்லி:
லோக்சபாவில் இன்று ஐக்கிய ஜனதாதள எம்.பி. பிரபுநாத்சிங்கை, லாலு பிரசாத்யாதவின் மைத்துனரும், ராஷ்டிரீய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி) எம்.பியுமான சாதுயாதவ் அடிக்கப் பாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லாலு கட்சி எம்.பிக்கள்ஒரு மைக்கையும் உடைத்து ரகளை செய்தனர்.
பிரபுநாத் சிங் இன்று காலை லோக்சபாவில்பேசுகையில்,பீகார் அரசியல் விவகாரத்தில்சில மத்திய அமைச்சர்கள் சட்டவிரோதமாக தலையிடுவதாக குறிப்பிட்டார்.சபைக்கு சம்பந்தம் இல்லாமல் பிரபுநாத் பேசுவதாக கூறி அவர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
இந் நிலையில், ஆர்.ஜே.டி. எம்.பிக்கள் பிரபுநாத் சிங்கை நோக்கி பாய்ந்தனர். சிலர்சபையின் மையப் பகுதிக்கு விரைந்தனர். இதையடுத்து சபையை ஒத்திவைப்பதாககூறி சபாநாயகர் எழுந்து சென்றார்.
ஆனால் ஆர்.ஜே.டி.எம்பிக்களின் கோபம் ஓயவில்லை. லாலு பிரசாத் யாதவின்மைத்துனர் சாதுயாதவ் படுகோபமாக பிரபுநாத் சிங்கை நோக்கிப் பாய்ந்தார்.
அவருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.பின்னர் தனது கையை மடக்கிபிரபுநாத் சிங்கை அடிக்கப் பாயந்தர். பிரபுநாத்சி ங்கும், சாதுவை திருப்பி அடிக்கத்தயாரானார்.
அவர்களை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தடுத்ததோடு, அவைக் காவலர்களைஉள்ளே வரவழைத்தார். கடும்முயற்சிக்குப் பின்னர் இருதரப்பு எம்.பிக்களையும்அவர்கள் விலக்கிவிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் ஆர்.ஜே.டி. எம்.பிக்களில் ஒருவர் பத்திரிக்கையாளர்கள் அமர்ந்திருந்தபகுதிக்குச் சென்று மைக்கை பிடுங்கி, பாஜக உறுப்பினர்களை நோக்கி வீசினார். அந்தமைக் ஒரு பாஜக எம்.பியின்முழங்காலில் பட்டு விழுந்தது.
இதையடுத்து கோபமடைந்த பாஜக எம்.பிக்கள் தங்களது டேபிளில் இருந்தகோப்புகளில் இருந்த காகிதங்களை நாலாபுறமும் வீசினர். கிட்டத்தட்ட அரைமணிநேரம்இந்த ரகளை நடந்தது.
இதனால் லோக்சபாவில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications