இடஒதுக்கீடு சட்ட மசோதா: டாக்டர்கள், மாணவர்கள் ஸ்டிரைக்
டெல்லி:
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடுவழங்கும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்புதெரிவித்து டெல்லியில் உள்ள ஐந்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளின் மாணவர்கள், டாக்டர்கள் 24 மணி நேர ஸ்டிரைக் போராட்டத்தைத்தொடங்கியுள்ளனர்.
27 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை நாளை லோக்சபாவில் தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஐந்து மருத்துவக்கல்லூரிகள் மற்றும்மருத்துவமனைகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் போராட்டத்தில்குதித்துள்ளனர்.
நேற்றே இந்தப் போராட்டத்தில் பல டாக்டர்களும், மருத்துவக் கல்லூரிமாணவர்களும் குதித்து விட்ட நிலையில் இன்று 3 மருத்துவமனைகளின் டாக்டர்கள்ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் குதித்தனர்.
அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம், பல்கலைக் கழக மருத்துவ விஞ்ஞானகழகம், ஹிந்து ராவி மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மெளலானா ஆசாத்மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று விடுப்பு எடுத்து போராட்டத்தைதொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக இந்த மருத்துவமனைகளில் நோயாளிகள் கடம் பாதிப்புக்குஆளாகியுள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவுகள் மட்டுமே இயங்கி வருகின்றன.போராட்டத்தில் குதித்துள்ள டாக்டர்களும், மாணவர்களும் இந்தியா கேட் அருகேமனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக உள்ளிருப்பு டாக்டர்கள் சங்கத்தலைவரும், சமத்துவத்திற்கான இளைஞர் அமைப்பின் தலைவருமான பினோத்பாத்ரா கூறுகையில், அடுத்த முறை காங்கிரஸ் கட்சிக்கு டாக்டர்களும், மருத்துவக்கல்லூரி மாணவர்களும் வாக்களிக்க மாட்டார்கள்.
நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்காக வருந்துகிறோம். ஆனால் எங்களதுகோரிக்கையை அரசு கேட்க மறுத்து விட்டதால் வேறு வழியின்றி இப்போராட்டத்தில்குதித்துள்ளோம்.
எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது என்பதை அரசு விளக்கவேண்டும். இந்த இட ஒதுக்கீட்டால் யாருக்கு பாதிப்பு ஏற்படப் போகிறது.பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களா? அல்லது கிரீமிலேயரைச் சேர்ந்தவர்களா?என்றார் பாத்ரா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications