சமைத்து சாப்பிட்டு விட்டு சாவகாசமாக கொள்ளையடித்த திருடர்கள்!
சென்னை:
சென்னை அருகே வண்டலூரில் ஆள் இல்லாத வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்சாம்பார் வைத்து சமையல் செய்து ஆற அமர சாப்பிட்டுவிட்டு வீட்டைகொள்ளையடித்துச் சென்றுள்ளது அப்பகுதியினரை திகிலடைய வைத்துள்ளது.
வண்டலூர் லட்சுமி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் நாகராஜ்.சாப்ட்வேர் என்ஜீனியராக இருக்கிறார் நாகராஜ். தனது சித்தப்பா மகனுக்கு பெண்பார்ப்பதறகாக நாகராஜ், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தண்டையார்பேட்டைக்கு சென்றிருந்தார்.பெண் பார்த்து விட்டு உறவினர் வீட்டுக்குச் சென்ற நாகராஜ் அங்கு இரவு தங்கினார்.இந்த நிலையில் காலையில் நாகராஜ் வீட்டுக்கு கூரியர் நிறுவன ஊழியர் ஒருவர்பார்சலுடன் வந்துள்ளார். அப்போது வீடு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் யாரும்இல்லாததை அறிந்த கூரியர் நிறுவன ஊழியர், பக்கத்து வீட்டுக்குச் சென்று, நாகராஜ்வீடு திறந்து கிடக்கிறது.
வீட்டுக்குள் யாரும் இருப்பது போலத் தெரியவில்லையே என்று கூறியுள்ளார்.இதையடுத்து பக்கத்து வீட்டினர், நாகராஜ் குடும்பத்துடன் தண்டையார் பேட்ட்ைகுச்சென்றிருக்கும் போது வீடு எப்படித் திறந்து கிடக்கும் என அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ஜி.எஸ்.டி.சாலையில் உள்ள நாகராஜின் உறவினர் வீட்டுக்குத் தகவல்தெரிவித்தனர். அவர் நாகராஜுக்கு தகவல் தர நாகராஜ் விழுந்தடித்துக் கொண்டுவிரைந்து வந்தார். வீட்டுக்குள் நுழைந்து பார்த்த நாகராஜுக்கு பெரும் அதிர்ச்சிகாத்திருந்தது.
வீட்டில் உள்ளபொருட்கள் தாறுமாறாக சிதறிக் கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில்இருந்த 14 பவுன் நகை, வெள்ளிப் பாத்திரங்கள், ரூ. 20,000 ரொக்கப்பணம்,விலைஉயர்ந்த பொருட்கள், வீட்டு உபயோகப் பாத்திரங்கள், சமையல் பாத்திரங்கள்உள்ளிட்டவை திருடு போயிருந்தன.
மொத்தத்தில் வீடே வழித் தெடுக்கப்பட்டிருந்தது. நகைகள் தவிர மற்ற பொருட்களின்மதிப்பு ரூ. 3லட்சம் இருக்கும் எனத் தெரிகிறது. திருட வந்த அயோக்கியர்கள், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பழங்கள், குளிர்பானங்களை வயிறுமுட்ட குடித்துள்ளனர்.
பின்னர் சாம்பாரும் வைத்து தோசையும் சுட்டு ஆற அமர உட்கார்ந்துசாப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து கட்டி வைத்துவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுள்ளனர். அதிகாலையில் வீட்டை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர்.
வீட்டு சமையல் அறையில் சில சமையல் பாத்திரங்கள் இருந்தன. ஆனால் அவைதங்களுடையது அல்ல என்று நாகராஜ் குடும்பத்தினர் போலீஸாரிடம் தெரிவித்தனர்.எனவே வேறு ஒரு வீட்டில் இருந்து அப்பாத்திரங்களை திருடி வந்து இங்கே போட்டுவிட்டு புதுப் பாத்திரங்களுடன் கொள்ளையர்கள் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த துணிகர கொள்ளை குறித்த ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துகொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் வண்டலூர்பகுதியில் பெரும் திகிலை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications