இந்திய தொழிலாளர்களின் பணத்தை சுரண்டும் அமெரிக்கா: லோக்சபாவில் புகார்
டெல்லி:
அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்பும் போது அவர்கள் செலுத்திய சமூகபாதுகாப்பு பணத்தை திரும்பத்தராமல் அமெரிக்க அரசு மோசடி செய்வதாக நாடாளுமன்ற லோக்சபாவில்எம்.பிக்கள் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோஷினா கித்வாய் மற்றம் விஜய் தர்தா, நஜ்மா ஹெப்துல்லாஆகியோர் இது தொடர்பாக லோக் சபாவில் பேசுகையில்,அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமிருந்துகிட்டத்தட்ட 600 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணம் சமூக பாதுகாப்பு நிதி (நம்ம ஊர் சேம நலநிதியைப் போன்றது) என்ற பெயரில் பெறப்பட்டுள்ளதாக நாஸ்காம் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் இந்தியர்கள் தான் அதிகம். இவர்கள் நாடு திரும்பும் போது இந்தப் பணத்தை அமெரிக்க அரசு திரும்பத்தருவதில்லை. இதன் மூலம் இந்தியர்கள் பல லட்சம் பணத்தை இழக்க நேரிடுகிறது. இதுகுறித்து மத்திய அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அனந்த் சர்மா பதிலளிக்கையில்,அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக உறுப்பினர்கள்கூறியுள்ளனர். இந்தக் கவலையில் மத்திய அரசும் பங்கு கொள்கிறது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு மத்திய அரசு கொண்டு செல்லும். இந்திய தொழிலாளர்கள்செலுத்தும் சமூக பாதுகாப்பு நிதி பிரச்சினை குறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு இந்திய அரசு கொண்டுசெல்லும்.
இந்திய மாணவர்கள் மற்றம் தொழிலாளர்கள் தொடர்பான அமெரிக்க அரசின் குடியேற்ற சீர்திருத்த சட்டமசோதா இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. எனவே அதனால் இந்திய மாணவர்கள் மற்றும்பணியாளர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று இப்போதே கவலை கொள்ளத் தேவையில்லை.
சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் மட்டுமே அதுகுறித்து நாம் விவாதிக்க முடியும். அமெரிக்காவில்பணியாற்றி வரும் இந்தியத் தொழிலாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக வரும் புகார்கள் குறித்துஅமெரிக்காவில் உள்ள தூதரக அலுவலகங்கள் உரிய முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அனந்த் சர்மா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications