நாட்டின் ஒற்றுமைக்கு நான் விரோதியா?-வைகோ
சேலம்:
இந்தியாவின் ஒற்றுமைக்கு நான் விரோதி அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நடந்த மதிமுக கூட்டத்தில் வைகோ கூறியதாவது,நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் காலத்தில் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் திட்டமிட்ட கடுமையானவிமர்சனத்துக்கு இலக்கானேன். அதே போன்று தற்போதும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கும் நிலையில்உங்களிடம் பேசுகிறேன்.
மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராமசாமி உடையாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்றேன். சற்றுதொலைவில் இருந்து பார்ப்வர்கள் என்ன வைகோ காங்கிரஸ் தலைவர் மறைவிற்கு அஞ்சலி செலுத்த சென்றுஇருக்கிறாரே என்று எண்ணலாம். நான் அரசியலில் நட்பையும், அரசியல் நாகரீகத்தையும் என்றும்கடைப்பிடிப்பவன். இது என் கடமை.
அண்டை மாநிலமான ஆந்திராவில் மக்கள் போர்க்குழு ரத்தக்களறியை ஏற்படுத்துகிறார்கள். தமிழர்கள்இயற்கையாக எழுச்சி மிக்கவர்கள். வீரத்தை பறை சாற்றுபவர்கள். மானத்திற்காக உயிரையும் கொடுப்பவர்கள்.இலங்கைக்கு இந்தியா உதவுவது மோசமான நிலையை ஏற்படுத்தி விடும்.
ஈழத்தமிழர் பிரச்சனையில் ராணுவம் உதவி செய்தால் பழிக்கு ஆளாக நேரிடும் என்று பிரதமரிடம் கூறினேன்.தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்தியாவின் மீது நம்பிக்கை இல்லாமம் போவார்கள் என்றேன்.
அது ஏற்படாமல் தடுக்க உங்களின் அணுகுமுறை தமிழ் இனத்துக்கு எதிராக இருக்கக்கூடாது என்று பிரதமரிடம்கூறினேன். அவரும் எனது கருத்தின் உண்மை நிலையை புரிந்து கொண்டார். நான் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் விரோதி அல்ல.
கருணாநிதியை பொறுத்தமட்டில் கேள்வியும், அவரே, பதிலும் அவரே, அவர்தான் சட்டமன்றத்தில் தூண்டிவிட்டுபதில் சொல்கிறார். நான் வன்முறையை தூண்டவில்லை. மதிமுகவை நிர்மூலம் ஆக்க கருணாநிதி நினைத்தார்.முடியவில்லை. அது முடியாது.
சட்டமன்ற தேர்தல் முடிந்த உடன் காங்கிரசுக்கு கருணாநிதி பட்டை நாமம் போட்டார். இன்று தமிழகசட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை நடக்கிறது. சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடக்கிறார். சட்டமன்றத்தில்அதிமுக எம்எல்ஏக்களை பேசவிடாமல் வெளியேற்றுகிறார்கள்.
தன்னந்தனியாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சட்டமன்றம் சென்று கருணாநிதியை திணறடித்தார்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் என் அன்பு அண்ணன் வைகோ என்றுஜெயலலிதா சொன்னதை கருணாநிதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கருணாநிதி அறிவித்த கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், கியாஸ் அடுப்பு போன்ற திட்டங்களை முழுமையாகநிறைவேற்ற இப்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது போன்று 2 மடங்கு வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் சேலம், சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சிகள் கைவிட்டு போய்விடும் என்றபயத்தில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கும் சட்டத்தை கருணாநிதி மாற்றினார். கூட்டணி கட்சிதலைவர்களுடன் அவர் விவாதிக்கவில்லை.
திமுக அரசு தள்ளாடும் மைனாரிட்டி அரசு. உலகில் எங்கு தமிழர்கள் வேதனைப்பட்டாலும் அவர்களை காக்கநான் போராடி இருக்கிறேன். போரில் பெற்றோரை இழந்தை 61 குழந்தைகள் இலங்கையில் கொல்லப்பட்டனர்.50 ஆண்டு கால வரலாற்றையும், அதற்கான பரிகாரத்தையும் சொன்னேன்.
தமிழர்கள் மீது தொடுக்கப்படும் காட்டிமிராண்டித்தனமான தாக்குதலை கண்டிக்க வேண்டாமா? இந்தியா,இலங்கை ராணுவ ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்த பழ.நெடுமாறன் மற்றும் என்னை தவிர யாரும் அறிக்கைதரவில்லை.
மக்கள் எங்களை எந்த இடத்தில் வைத்தாலும் எங்கள் கடமையை செய்வோம். ஒருபோதும் வன்முறையில்ஈடுபட மாட்டோம். நாங்கள் 12 வருடம் கஷ்டப்பட்டு விட்டோம். அந்த கஷ்டம் எங்கள் இதயத்தை வலுவாக்கிவிட்டது.
திமுகவுக்கு இனி ஒரு சோதனை வந்தால் படாதபாடுபட்டு விடுவார்கள். காங்கிரசும், பாமகவும் மாறி மாறிகூட்டணி அமைத்துள்ளன. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. நாங்கள் எடுத்து முடிவு சரியானது. என்னைபொறுத்தமாட்டில் கொள்கையும், புகழும் தான் நிரந்தரம் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications