குஜராத்: குறையும் பிறப்பு விகிதம்
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள்அதிக பருமனாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. மேலும், குஜராத்குடும்பங்களின் அளவும் குறைந்து வருவதாகவும் அந்த ஆய்வில்தெரிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தைச் சேர்ந்த தலீம் ஆய்வு கழகம் சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஆய்வுஒன்றை நடத்தியது. ஆய்வு முடிவுகள் குறித்து கழகத்தின் இயக்குநரான டாக்டர்பினோத் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். குஜராத்தில் பிறப்பு விகிதம்குறைந்து வருகிறது.கடந்த 1998-99ம் ஆண்டில் பிறப்பு விகிதம் 2.7சதவீதமாக குறைந்திருந்தது.2005-06ல் 2.4 சதவீதமாக அது குறைந்தது. 2010ல் இது 2.1 சதவீதமாக குறையம்என ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தான்பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது.
கிராமப்புறங்களில் பிறப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது. இதுவே நகர்ப்புறங்களில்1.92 சதவீதமாக உள்ளது. ஆணுறைகளைப் பயன்படுத்துவது அதிகரித்தால், பிறப்புவிகிதம் மேலும் குறையும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வழக்கமாக பெரிதாக காணப்படும் குஜராத் குடும்பங்களின் அளவுசுருங்கி வருகிறது. அதாவது, வீட்டுக்கு 10பேர், 15 பேர் என்று இருந்த நிலைஇப்போது மாறி வருகிறது. ஆயவில் இன்னொரு சுவாரஸ்யமான தகவலும்வெளியாகியுள்ளது. குஜராத் நகர்ப்புற பெண்கள், கிராமப் புற பெண்களை விட அதிகபருமனாகி வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரத்த சோகை அதிக அளவில் இருப்பதும்தெரியவந்துள்ளது. நகர்ப் புறங்களில் 32 சதவீத பெண்களும், 15 சதவீத ஆண்களும்அதிக பருமனாக உள்ளனர். கிராமப்புறங்களில் 24 சதவீத பெண்களும், 9 சதவீதஆண்களும் பருமனாக உள்ளனர்.
மொத்தத்தில் கடந்த 7ஆண்டுகளில் 16முதல் 20 சதவீத பெண்களின் உடல் எடைஅதிகரித்துள்ளது. ஒட்டு மொத்தமாக குஜராத்தில், பெரியவர்களுக்கும்,குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்து குறைபாடும் அதிகரித்துள்ளது. 47 சதவீதகுழந்தைகள் வயதுக்கேற்ற எடையுடன் இல்லை. 81சதவீத குழந்கைளும், 55.5 சதவீதபெண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல குழந்தைகள் இறப்பு விகிதம் கணிசமான அளவு குறைந்துள்ளது. கடந்த 7ஆண்டுகளில் இறப்பு விகிதம் 63 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைந்துள்ளது.2010ம் ஆண்டில் இது 30 சதவீதமாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.கர்ப்பிணிகளின் ஆரோக்கிய நிலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கர்ப்பம் தரித்த பெண்கள் அடிக்கடி சுகாதார மையங்களுக்கு செல்கின்றனர். முன்புஇந்த விழிப்புணர்வு குறைவாக இருந்தது. அதேபோல மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார மையங்களில் குழந்தை பெற்றுக் கொள்வதும் அதிகரித்துள்ளது.
முன்பு 46.3 சதவீதமாக இருந்த குழந்தை பிறப்பு இப்போது 55 சதவீதமாகஅதிகரித்துள்ளது. இருப்பினும் குழந்தை பிறந்த பின்னர் போட்டுக் கொள்ள வேண்டியதடுப்பூசிகளை போடுவோரின் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த 7ஆண்டுகளில் முழுமையான அளவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின்எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்துள்ளது.
வீட்டில் உள்ள பெண்கள், வீட்டில் உள்ள ஆண்களால், சித்திரவதைகளுக்கு ஆளாவதுகுஜராத்தில் பெரும் பிரச்சினையாகவே உள்ளது. இத்தனைக்கும் குஜராத் பெண்களில்56.7 சதவீதம் பேர் அவர்கள்தான் வீட்டு முடிவுகளை எடுக்கிறார்கள்.
அப்படி இருந்தும் கூட ஆண்களால் ஏற்படும் கொடுமைகள் குறைந்தபாடில்லை. 26.7சதவீத திருமணமான பெண்கள் தங்களது கணவர்கள் தங்களைகொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் படிக்காத பெண்கள் தான்அதிக அளவு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
இவர்களின் எண்ணிக்கை 34.3 சதவீதமாக உள்ளது. 25 மாவட்டங்களில் மொத்தம்3216 வீடுகளில், 15முதல் 49 வயது வரையிலான 3729 பெண்களிடம், 15 முதல் 54வயது வரையிலான 1428 ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தஆய்வு முடிவுகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications