தமிழகத்தில் மலேசிய கார் தொழிற்சாலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் ரூ. 1,200 கோடி முதலீட்டில் கார் தொழிற்சாலையை மலேசிய நாஸாஆட்டோமோடிவ் நிறுவனம் அமைக்கிறது.

இந் நிறுவனத்தின் சுதேரா ரக மினி கார்கள் மலேசியாவில் மிகப் பிரபலமானவை.

இந் நிலையில் அந்த நிறுவனம் இப்போது இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கதமிழகத்தை தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே சென்னையில் ஹூண்டாய், போர்டு,பிஎம்டபிள்யூ ஆகிய கார் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைத்துள்ளன.

இப்போது ரூ.1,200 கோடி முதலீட்டில் நாஸா கார் தொழிற்சாலை, சென்னையைஅடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமையும் என்று தெரிகிறது.

இந்தியாவில் கார் விற்பனை ஆண்டுக்கு 10 லட்சமாக அதிகரித்துள்ளது. எனவே கார்தொழிற்சாலை அமைக்க சரியான தருணம் என்று நாஸா நிறுவனம் கருதுகிறது.

முதலில் குறைந்த பட்ஜெட் கார் மாடலைத் தயாரித்து விற்கவுள்ளது. சிலஆண்டுகளில் பைக் உற்பத்தியையும் தொடங்கும் திட்டம் இருப்பதாக அதிகாரிகள்கூறினார். அந்தத் தொழிற்சாலையும் தமிழகத்திலேயே அமையும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் தமிழக தொழிற்சாலையில் கார் உற்பத்தி தொடங்கிவிடும்என அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+