கலாம் திறந்து வைக்கும் பல்கலை செனட் இல்லம்
சென்னை:
143 ஆண்டு பழமை வாய்ந்த சென்னை பல்கலைக்கழக செனட் இல்லத்தை குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் செப்டம்பர் 4ம் தேதி திறந்து வைக்கிறார்.
இந்த இல்லம் கடந்த 20 ஆண்டுகளாக சிதிலம் அடைந்து பயன்படுத்தப்படாமல்இருந்தது.2003ம் ஆண்டு துணைவேந்தராக போறுப்பேற்ற எஸ்பி.தியாகராஜன் செனட்இல்லத்தை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக நன்கொடைதிரட்டப்பட்டது. ரூ.4.39 கோடி நன்கொடையாகவும் ரூ.1 கோடி மத்திய மனித வளஅமைச்சகம் மூலமும் கிடைத்தது.
இதையடுத்து ரூ. 5 கோடி செலவில் செனட் இல்லத்தை புதுப்பிக்க அற்கட்டளைஏற்படுத்தப்பட்டது. இதில் வெலிங்டன் கார்ப்ரேட் பவுண்டேஷன், இண்டேக்அறக்கட்டளை, சென்னை ஹெரிட்டேஜ் டிரஸ்ட் ஆகியவை இடம் பெற்றன.புதுப்பிக்கும் பணி 2003ம் ஆண்டு தொடங்கியது. 150 தொழிலாளர்கள் இரவுபாகலாக புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உள் அரங்க பணிகள் முடிந்து விட்டன. கட்டிடத்தின் 2 கோபுர வேலை மட்டும் நடந்துவருகிறது. புதுப்பிக்கப்பட்டுள்ள செனட் இல்லத்தின் திறப்பு விழா அடுத்த மாதம் 4ம்தேதி நடக்கிறது.
குடியரசுத் தலைவர் அப்துல்காலம் செனட் இல்லத்தை திறந்து வைக்கிறார். செனட்இல்ல அரங்கில் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். விழாவில்பல்கலைகழக வேந்தரும் கவர்னருமான சுர்ஜித்சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி,மத்திய அமைச்சர்கள் அர்ஜூன்சிங், ப.சிதம்பரம், தயாநிதி மாறன் உள்ளிட்டோர்கலந்து கொள்கின்றனர்.
செனட் இல்லத்தில் அருட்காட்சியம் ஒன்றும் அமைக்கப்படுகிறது. இந்த இல்லம்கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்குவிடப்படும்.
செனட் இல்லம் சென்னையில் புரதான இல்லங்களில் ஒன்றாகும். இந்த கட்டிடம்கட்டப்பட்ட போது என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்துஆய்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications