நிலவில் நிலம் வாங்கிய கொல்கத்தா தம்பதி!
கொல்கத்தா:
கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் 100 டாலர் பணம் கொடுத்து நிலவில் 2 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர்.
நிலவைக் காட்டி குழந்தைகளுக்கு பால் சோறு ஊட்டிய காலம் மாறி, நிலவில் குடியேறும் நாள் எப்போது என்றகனவுக்கு உலக மக்கள் மாறியுள்ளனர். இந்த நிலையில் நிலவில் 2 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டுஆச்சரியப்படுத்தியுள்ளனர் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர்.கொல்கத்தாவின் ஹெளரா பகுதியில் வசிப்பவர் அனீஷ்தாஸ் குப்தா. இவரது மனைவி சோமா. டிராவல்ஏஜென்டாக பணியாற்றி வருகிறார் குப்தா. www.lunarrepublic.com என்ற இணைய தளத்தில், நிலவில் நிலம்வாங்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்ற தகவலைப் பார்த்து நிலம் வாங்க விண்ணப்பித்தார்.
அதன்படி 2 ஏக்கர் நிலத்தை 100 டாலர் கொடுத்து வாங்கியுள்ளார் குப்தா. கிரெடிட் கார்டு மூலம் பணத்தைக்கட்டிய குப்தாவுக்கு இப்போது நிலம் வாங்கியது தொடர்பான பத்திரங்களை அந்த இணையதளம் அனுப்பிவைத்துள்ளதாம்.
குப்தா வாங்கிய நிலம், நிலவில், டிராக்ட் 34 என்ற இடத்தில் உள்ளதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டள்ளதாம். குப்தா வாங்கிய நிலம் உள்ள பகுதி மலை மற்றும் கடலுக்கு சற்று தொலைவில் இருப்பதாக ஆவணத்தில்குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
நிலவில் நிலத்தை வாங்கி கிரயம் செய்துள்ளது குறித்து குப்தா கூறுகையில், ரஷ்யாவால் நிலவுக்கு சுற்றுலாப்பயணிகளை அனுப்பும் போது, அங்கே வீடுகட்டி மனிதன் குடியேறும் நாள் வெகு தொலைவில் இல்லைஎன்பதை உணர்ந்ததால் தான் அங்கு நிலம் வாங்கும் முடிவுக்கு வந்தேன்.
மக்கள் என்னை நிலவு மனிதன் என்று அழைத்தால் நான் பெருமைப்படுவேன் என்கிறார் குப்தா.












Click it and Unblock the Notifications