காயமடைந்த தந்தையை சுடுகாட்டில் விட்ட பாச மகன்!
புவனேஸ்வர்:
காலில் காயம் பட்டு நீண்ட காலமாக துடித்து வந்த தனது 75 வயது தந்தையை சுடுகாட்டில் கொண்டு போய் போட்ட மகன் ஒரிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளார்.
ஒரிசா மாநிலம் கர்தர்கார் நகர் அருகே உள்ளது கொரெய் கிாரமம். இக்கிராமத்தைச்சேர்ந்தவர் தேவானந்தா ஸாகு. இவருக்கு 6 மகன்கள் உள்ளனர். 75 வயதாகும்ஸாகுவினி காலில் நீண்ட நாட்களுக்கு முன்பு காயம் ஏற்பட்டது.மருத்துவம் பார்த்தும் அது குணமாகவில்லை. வேதனையால் துடித்து வந்த ஸாகு,தனது 2வது மகன் பேனுதாரின் வீடடில் தங்கியிருந்தார்.
காலில் காயத்துடன் இருந்த தனது தந்தையை பார்த்து எரிச்சலடைந்த பேனுதார், தனதுதந்தையை கிராமத்திற்கு வெளியே உள்ள சுடுகாட்டில் போய் போட்டு விட்டார்.அடுத்த நாள் காலையில் ஸாகு, சுடு காட்டில் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தகிராமத்தினர் அவரை ஊருக்குள் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு ஏதும் செய்யவில்லை. கேடடால், இதுகுடும்பப் பிரச்சினை இதில் போலீஸார் தலையிட முடியாது என்றுகூறி விட்டனர்.தகவல் அறிந்த்தும் ஸாகுவின் மற்ற மகன்கள் வந்து தங்களது தந்தையை அழைத்துச்சென்றனர்.
ஒரிசாவில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications