யார் தும்மினா ஆட்சி கவிழும்-இது குஜராத் ஸ்டைல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் கால் நடை மருத்துவத்துறையில் அதிகாரிகள் பணியிடங்களுக்கான தேர்வில்,யார் தும்மினால் மத்திய ஆட்சி கவிழும் என கேள்வி கேட்கப்பட்டிருப்பது குறித்துராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர் நாராயணசாமி பிரச்சினை எழுப்பினார்.
ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்.பி.நாராயணசாமி இது குறித்துப் பேசுகையில், குஜராத்மாநில கால்நடை மருத்துவத் துறையில் இரண்டாம் நிலை அதிகாரிகள்பணியிடங்களுக்கான தேர்வில் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதில், கருணாநிதி,ஜோதிபாசு, பிரகாஷ் காரத் உள்ளிட்டோரில் யார் தும்மினால் மத்திய ஆட்சி கவிழும்என கேட்டுள்ளனர்.இதுதவிர அந்தத் தேர்வில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை பார்த்தால், வகுப்புவாதத்தைத் தூண்டும் நோக்கம் கொண்டவை என்பதை எவரும் மறுக்க முடியாது.
இதே போல, சிறுபான்மையினர் கருப்பு தினமாகவும், சங்கபரிவார் அமைப்பினர்வெற்றி தினமாகவும் எந்த தினத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று ஒரு கேள்வி.
இது போன்ற வெட்கக் கேடான கேள்விகளை அந்தத் தேர்வில் கேட்டுள்ளதுகண்டனத்துக்குரியது என்றார் நாராயணசாமி.












Click it and Unblock the Notifications