சட்ட மாணவர் போராட்டம்: தூண்டி விடுவதாக கருணாநிதி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களைசிலர் பின்னாலிருந்து தூண்டி விடுவதாக தல்வர்கருணாநதி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த சென்டிரல் சட்டக் கல்லூரி என்ற தனியார் சட்டக் கல்லூரியின்மாணவரக்ள் கடந்த 3 நாட்களாக சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கல்லூரி நர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கிறது, அரசுஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களிடமும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அவர்களை அரசு சட்டக் கல்லூரிளுக்கு மாற்ற வேண்டும், இக் கல்லூரியைஅரசுடமையமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அவர்கள்கைது செய்யப்பட்டனர். இது சட்டசபையில் பிரச்சினையை கிளப்பியது. இதைததொடர்ந்து அவர்களை விடுதலை செய்தனர் போலீஸார்.

ஆனால் மாணவர்கள் பாரிமுனை பகுதியில் விடியவிடிய போராட்டத்தில்ஈடுபட்டனர். இதையடுத்து 102 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில்அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில ஈடுபட்டிருப்பது குறித்துசட்டசபையில் இன்று அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார் கவனஈர்ப்புத் தீர்மானம்கொண்டு வந்தார்.

அவர் பேசுகையில், சேலம் தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில்ஈடுபட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்ய வேண்டும். கல்லூரிக் கல்விக் கட்டணத்தை குறைக்கவேண்டும் என்றார். அதற்குப் பதிலளித்த சட்ட அமைச்சர் பெரியசாமி,பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறியும் கூடமாணவர்கள் கேட்காமல் சாலைமறியல் செய்தனர்.

சட்டத் துறைச் துணை செயலாளர் பூவலிங்கம் நேரில் சென்று பேச்சுவார்த்தைநடத்தினார். பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. மகேந்திரன், இந்திய மாணவர் சங்கத்தலைவர் செல்வா, வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆகியோர் பேசியும மாணவர்கள்சமரசம் அடையவில்லை.

பின்னர் நானே நேரில் சென்றும் சமாதானப்படுத்தினேன். முதலில் சரி என்றார்கள்.பின்னர் சிலரது தூண்டுதலின் பேரில் இரவு 2 மணி வரையில் சாலை மறியலில்ஈடுபட்டனர். போலீஸ் வாகனத்தையும் உடைத்துள்ளனர்.

வேறுவழி இல்லாததால்தான் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.மாணவர்களின் போராட்டத்தின் பின்னணியில் சிலர் உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரிக்கே ரூ. 17,000 கல்விக் கட்டணமாகநிர்ணயிக்கப்பட்டது.

நாங்கள் வந்த பின் அதை ரூ. 2,000 ஆகக் குறைத்தோம் என்றார்.

பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், இங்கே பேசிய முன்னாள் அமைச்சர்ஜெயக்குமார், எங்களது காலத்தில் மாணவர்கள் தெருவுக்கு வரவில்லை என்றார்.அப்போது அவர்கள் கையில் எதுவும் இல்லை. இப்போது கையில் இருக்கிறகாரணத்தால் தெருவுக்கு வந்திருக்கிறார்கள்.

பொதுவாக நல்லாட்சி ஒன்று நடக்கும்போது அல்லது நல்ல ஆட்சி நடப்பதாககருதப்படும்போது ஏதாவது ஒரு களங்கத்தை ஆட்சிக்கு ஏற்படுத்த வேண்டும் என்றஎண்ணத்தில் பகடைக்காயாக மாணவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற வேதனைஎனக்கு இருக்கிறது.

அந்தக் கல்லூரியில்மாணவர்கள் குறிப்பிட்டஅளவு கட்டணம் செலுத்துவதாக ஏற்றுக்கொண்டு சேர்ந்திருக்கிறார்கள். இப்போது அரசாங்கக் கல்லூரி அளவுக்குகட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள்.

அதுபற்றிப்பேசலாம். தனியார் கல்லூரி நிர்வாகத்திடமும் பேசலாம் என்றால் வரமறுக்கிறார்கள். அமைச்சர் பெரியசாமி இரவு முழுவதும் பேச்சு நடத்தியும் வரமறுத்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ.ரவிக்குமார், கட்சித் தலைவர்திருமாவளவன் ஆகியோருடனும் சேர்ந்து அமைச்சர் பெரியசாமி மாணவர்களுடன்பேசியுள்ளார்.

இதுகுறித்து அதிகாலையில் நான் பெரியசாமியிடம் விசாரித்தபோது 2 நாளில் தீர்வுஏற்படும் என்றார. இதைத் தெரிந்து கொண்டு சட்டசபைக்கு நான் வந்தபோது எனக்குஓலை வந்தது. மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தி கைதாகி வேலூர் சிறையில்அடைக்கப்படடுள்ளனர் என்று.

இடையே வேறு என்னவோ நடந்திருக்கிறது. மாணவர்கள் பிரச்சினைகளைவளர்க்கவோ, பெரிதாக்கவோ, அவர்களை அடக்கியோ தீர வேண்டும் மமதையோகொண்டு நடக்கக்கூடியவர்கள் அல்ல.

சேலம் தனியார் கல்லூரி உரிமையாளர் தனபாலனுக்கு உத்தரவிடுகிறமுறையில் சேதிஒன்றை அனுப்பியிருக்கிறேன். அதில் அரசுக் கல்லூரி அளவுக்கு கட்டணத்தைக்குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.

அவ்வாறு குறைத்தால்கல்லூரியை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர்கூறியிருக்கிறார். எனது கல்லூரியில் கட்டணத்தைக் குறைத்தால் மற்ற கல்லூரிகளில்இப்போது குறைப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவர் பிரச்சினையில் தீர்வு காண்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது.அவர்களை சிறையில் அடைக்க விரும்பவில்லை. அவர்களை தூண்டிவிட்டவர்கள்இந்த அவையில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் எண்ணிப் பார்க்க வேண்டும்என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+