இட ஒதுக்கீடு: கருணாநிதி தலையிட வீரமணி கோரிக்கை
சென்னை:
உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவைநாடாளுமன்றத்தில் நறைவேற்ற முதல்வர் கருணாநிதி தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு இடங்கள் அளிப்பது என்கிறபிரச்சனை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 21ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு கல்வி நிலையங்களில்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இடம் அளிப்பதில் பொருளாதார அளவுகோல் இருக்காது என்று எடுக்கப்பட்டமுடிவுக்கு திராவிடர் கழகம் பாராட்டுதல்களை தெ>வித்துக் கொள்கிறது.
இப்போழுது மிக முக்கியமான அடுத்த கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறுந்து விடக்கூடாது.பிரதமருக்கு தக்க நேரத்தில் கடிதம் எழுதி அமைச்சரவையில் சரியான முடிவு எடுக்கப்படுவதற்கு முக்கியகாரணமாக இருந்த முதல்வர் கருணாநிதி அதன் தொடர்ச்சியாக இந்த நேரத்தில் ஆற்ற வேண்டிய மிகமிகமுக்கியமான கடமை ஒன்று இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் சட்டம் நறைவேற்றப்பட தம் செல்வாக்கை முதல்வர் பயன்படுத்த வேண்டும் என்று கோடானகோடி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக பிரதமரிடமும், காங்கிரஸ் தலைவர்சோனியாகாந்தியிடமும் தொடர்பு கொண்டு இதனை வலியுறுத்தது மாறு கோருகிறோம்.
தமிழகத்தை சேர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களும் காலதாமதம் செய்யாமல்நாடாளுமன்றத்தில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதால், முழுவீச்சில் இறங்கிக் கடமையாற்று மாறும்கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications