நத்தம் விஸ்வநாதன் வீடுகளில் ரூ. 48 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
சென்னை:
முன்னாள் அதிக அமைச்சர் நத்தம் விசுவநாதன் மற்றும் அவரது நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில்நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெ>வித்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் நத்தம் விசுவநாதன். இவரது வீடுமற்றும் இவரது நண்பர்கள் வீடுகளில் வருமான வரிசோதனை நடத்த வருமான வரித்துறையின் மதுரை சரகஇயக்குநர் முத்துராமகிருஷ்ணன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம், தமிழகம் முழுவதும் 24இடங்களில் சோதனை நடைபெற்றது.இதில் விசுவநாதனின் வீடு, அவரது சகோதர் ஜெயராம் மற்ரும் விசுவநாதனின் நண்பர்களின் வீடுகள் அடங்கும்.இதுதவிர மதுரை, திண்டுக்கலில் உள்ள விசுவநாதன் மற்றும் அவரது நண்பர்களுக்குச் சொந்தமான சினிமாதியோட்டர்கள், பெட்ரோல் நிலையங்கள், கல்வி நிலையங்கள், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள், ஹோட்டல்கள்மற்றும் போக்குவரத்து நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது.
சென்னையில் தி.நகர் நியூ கிரி சாலையில் நத்தம் விசுவநாதனுக்கு சொந்தமான அடுக்கு மாடிக் குடியிருப்பிலும்சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் மொத்தம் 200 வருமான வரித்துறையினர் சோதனையில்ஈடுபட்டார்கள்.
சோதனையில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுக்கு உரிய கணக்கு இல்லாமல் இருந்தது தெரியவந்தது.மொத்தம் 24 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் ஏராளமான தங்க நகைகள் மற்றும் ஆவணங்களைவருமானவ>த் துறையினர் பறிமுதல் செய்தார்கள். ரொக்கப் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
சோதனையில் சிக்கிய பொருட்களை மதிப்பிடும் பணி நடைபெற்றது. இதில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் உள்பட ரூ.1 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதை வருமானவரித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications