பெண் சாராய வியாபாரி கற்பழிப்பு: 3 போலீசார் சஸ்பெண்ட்
தர்மபுரி:
தன்னை மது விலக்கு போலீசார் 3 பேர் கற்பழித்தாக பெண் சாராய வியாபாரிகொடுத்த புகாரை அடுத்து 3 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் புவேஸ்வரி (33). கணவரைப் பிரிந்தஇவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். கள்ளச் சாராயம் விற்று வரும்புவனேஸ்வரி தர்மபுரி மாவட்ட போலீஸ் எஸ்பியை சந்தித்து புகார் ஒன்றைகொடுத்தார்.அதில், மதுவிலக்கு போலீசார் ராஜேந்திரன், சேகர், முனிராஜ் ஆகியோர் வீடு புகுந்துதன்னை மாறி மாறி கற்பழித்தாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது புகார் விவரம்:
நான் எச்.கொட்டாம்பட்டியில் வசித்து வருகிறேன். கடந்த 7ம் தேதி மதுவிலக்குபோலீசார் அத்துமீறி எனது வீட்டுக்குள் புகுந்து எனது செல்போன். வெள்ளி கொலுசு,ரூ.740 ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து நான் அரூர் டிஎஸ்பியிடம் புகார் செய்தேன். அவர் விசாரணை நடத்தி ரூ.3,000 பெற்றுத் தந்தார். இந் நிலையில் 13ம் தேதி மீண்டும் அவர்கள் என்னிடம் வந்துடிஎஸ்பியிடமா புகார் கூறுகிறாய் எனக் கேட்டு தகராறு செய்தனர்.
மறுநாள் 14ம் தேதி எனது கூரை வீட்டுக்கு அவர்கள் தீ வைத்துவிட்டனர். இதுகுறித்துநான் டிஎஸ்பியிடம் புகார் கூறினேன். 20ம் தேதி நான் கோவையில் உள்ள எனதுமகனை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். 21ம் தேதி மீண்டும் போலீசார் என்வீட்டுக்கு வந்து என்னை கற்பழித்து விட்டு ஓடிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து புகார் கூறப்பட்ட மது விலக்கு போலீஸார் 3 பேரையும் தற்காலிகவேலை நீக்கம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications