மாணவிகளை கடத்தி திருமணம்-2 வாலிபர்கள் கைது
பல்லடம்:
பள்ளி மாணவிகளை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனார்.மேலும் இவர்களுக்கு உதவியாக இருந்த மற்றொரு வாலிபரும் கைது செய்யப்பட்டார்.
பல்லடம் கரையாம்புதூரைச் சேர்ந்த சிவமூர்த்தியின் மகள் பூர்ணிமாதேவி (17). பத்தாம் வகுப்பு படிக்கிறார்.ஜேகேஜே.காலனியை சேர்ந்த கணேசனின் மகள் சங்கீதா (17). பிளஸ் 1 படிக்கிறார்.கடந்த 13ம் தேதி பள்ளிக்கு சென்று இவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் இருவரது பெர்றோரும்பல்லடம் போலீசில் புகார் செய்தனர்.
விசாரணையில் பல்லடம் தெற்கு பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (19). ஜேகேஜே.காலனியை சேர்ந்த ராஜசேகர்(19) ஆகியோர் மாணவிகளை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதற்கிடைய ராஜசேகர் உடல் நலம்சரியில்லாமல் கொடுவாய் பகுதியில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரித்ததில் மாணவிகளை பழனிக்கு கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதும்,அதன்பின் காரைக்குடி சென்று கூலி வேலை செய்து வந்தோம் என்று கூறினார். அவர் கொடுத்த தகவலின் பேரில்மாணவிகள் இருவரும் மீட்கப்பட்டனர்.
அவர்களை கடத்தி கட்டாய திருமணம் செய்ததாக ராஜேஷ். ராஜசேகர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக பாரதிபுரத்தை சேர்ந்த சிவராஜ் (19) என்வரும் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications