இந்திய பயணிகளுக்கு வலை வீசும் ஆஸ்திரேலியா
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் குறுகிய கால சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய சுற்றுலாபயணிகளுக்காக ஆன்லைன் மூலம் விசா (இ-விசா) வழங்கும் முறையைஆஸ்திரேலிய அரசு தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா விசா பெற விரும்புவோர் தற்போது கடுமையான நடைமுறைகளைசந்திக்க வேண்டியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்லவிரும்புவோர் அதிக அவஸ்தைக்கு ஆளாகின்றனர்.இதைக் குறைத்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில்ஆன்லைன் மூலம் விசா வழங்கும் முறையை அமல்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியா.
இருப்பினும் இந்தத் திட்டம் 46 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அமலில்உள்ளது. இந்தியர்களுக்கும் தற்போது இந்தமுறையை நீட்டிக்க ஆஸ்திரேலிய அரசுதிட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் அமெண்டாவான்ஸ்டோன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எலக்ட்ரானிக் விசா முறை மூலம் வரும் இந்திய சுற்றுலா பயணிகள் மூலம் ஆண்டுக்கு2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அளவுக்கு வருவாய் கிடைக்கும். இந்தியர்களின்பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந் நிலையில் அவர்களதுவிடுமுறைக்கால விருப்ப இடமாக ஆஸ்திரேலியாவை மாற்ற வேண்டியது அவசியம்.
இ-விசா பெற விரும்புவோர், இதற்கென சிறப்புப் பயிற்சி பெறப்பட்டஏஜென்டுகளை அணுகி விண்ணப்பிக்கலாம். இந்த முறை குறிததும், எப்படிவிண்ணப்பிப்பது என்றும் அந்த ஏஜென்டுகள் இந்திய சுற்றுலா பயணிகளுக்குஉதவுவார்கள்.
தற்போது இதுபோன்ற 100 ஏஜென்டுகள் இந்தியாவில் உள்ளனர் என்று கூறியுள்ளார்வான்ஸ்டோன்.












Click it and Unblock the Notifications