திமுகவுக்கு எதிராக தெருமுனை பிரச்சாரம்: ஜெ
சென்னை:
திமுக அரசின் தோல்விகள் குறித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த அதிமுகவினருக்கு முன்னாள்முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக அரசின் பொய்யான வாக்குறுதிகளால் பொய்யான திட்ட அறிவிப்புகளால் மக்களின் வாழ்க்கை கானல்நீராகிவிட்டது.
போதுமான நிதியின்றி பொழுதுக்கொரு திட்டம் என்ற பெயரால் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவது நியாயம்தானா? என்று சட்டசபையில் கேள்வி கேட்போரை திசை திருப்பிவிடும் பேச்சுக்கள், அவையை விட்டுவெளியேற்றுவது போன்றவை தான் திமுக அரசின் 100 நாள் சாதனைகள்.
இந்த அரசின் அறிவிப்புகள் கனவில் கிடைத்த பணத்தைப் போல ஆகிவிட்டது. நிஜத்தில் நிறைவேற்ற முடியாதுஎன்று தெரிந்தே மக்களை ஏமாற்றிடும் இந்த அரசின் முறைகேடுகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சொல்லவேண்டும்.
வங்கிக் கடன் ரத்து என்று கோப்பில் கையெழுத்திட்டுவிட்டு நபார்டு வங்கிக்கும் கூட்டுறவு வங்கிக்கும் பணத்தைசெலுத்தாதால் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.
தொலைக்காட்டி பெட்டி இல்லாத அனைவருக்கும் இலவச டிவி வழங்கப்படும் என்று பட்டிதொட்டியெங்கும்கூறிவிட்டு இப்போது 30,000 பேருக்கு மட்டும் தரப்படும் என்று கருணாநிதி கூறுகிறார்.
தமிவகத்தில் விறகு, மண்ணெண்ணை அடுப்புகளை ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள்பயன்படுத்துகின்றன. அவர்கள் அனைவருக்கும் இலவச கேஸ் ஸ்டவ், சிலிண்டெர் இணைப்பு எனஅறிவித்துவிட்டு அதற்கு மிகக் குறைவான தொகையையே ஒதுக்கியுள்ளனர்.
படித்த இளைஞர்கள் அனைவருக்கும் நிதியுதவி என்று அறிவித்துவிட்டு இப்போது அதற்கு நிறையகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் என்று கூறி, முதலில் 5 லட்சம் பேருக்கு என்றும் பின்னர் கையளவு நிலம் என்றும்கடைசியில் எத்தனை பேருக்கு என்று சொல்ல முடியாது என்றும் முன்னுக்குப் பின் முரணாக அரசால்சொல்லப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதால் நித்தம், நித்தம் கொலைகள், கொள்ளைகள், ரேசன் அரிசி கடத்தல் நடந்துவருகிறது.
இதைப் பற்றி வரும் செப்டம்பர் 5ம் தேதி முதல் 20ம் தேதி வரை அதிமுக சார்பில் நடக்கும் தெருமுனைபிரச்சாரக் கூட்டங்களில் எடுத்துரைக்கப் போகிறோம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications