வருமான வரித்துறை வக்கீலை அடித்த அதிமுக வக்கீல்கள்!
சென்னை:
ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு நேற்று விசாரிக்கப்பட்ட போது,நீதிபதி கண் முன்பாகவே, வருமான வரித்துறை வழக்கறிஞரை, அதிமுக வழக்கறிஞர்கள் அடித்தும், கவுனைப்பிடித்து இழுத்தும், ஒருமையில் பேசியும் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு நேற்று எழும்பூர்பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது அதிமுக வழக்கறிஞர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். நீதிமன்ற அறையில் அவர்கள்குழுமியிருந்தனர். வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமசாமி, ஜெயலலிதாவும், சசிகலாவும்வேண்டும் என்றே விசாரணையை இழுத்துக் கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த அதிமுக வழக்கறிஞர்கள், ராமசாமியைப் பார்த்து ஒருமையில் திட்டினர், சிலர்பிரசுரிக்க முடியாத வார்த்தைகளாலும் திட்டினர். சில வழக்கறிஞர்கள், ராமசாமியின் கவுனைப் பிடித்து இழுத்தும்,முதுகில் குத்தியும் ரகளையில் ஈடுபட்டனர்.
இத்தனை சம்பவங்களும் நீதிபதி ராஜு முன்னிலையில் நடந்த போதிலும், நீதிபதி அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். அதிமுகவினரின் அட்டகாசங்களை கண்டு அஞ்சாத ராமசாமி தான் பேசியதை தொடர்ந்து பேசிமுடித்தார்.












Click it and Unblock the Notifications