வண்டலூர் அருகே சென்னை துணை நகரம்: தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை!
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே துணைநகரம் அமைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிடாவிட்டால்கிராம மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்து வேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் துணை நகரங்கள் அமைக்கப்படும் எனதமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை அருகே இரண்டு துணை நகரங்கள் அமைக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு துணை நகரத்தை சென்னை அருகே உள்ள வண்டலூர் பக்கம்அமைக்கதிட்டமிடப்பட்டுள்ளது.அரசு துணை நகரம் அமைக்கத் திட்டமிட்டுள்ள இடத்தில் விவசாய நிலங்களும் உள்ளதால், 132 கிராமங்களைச்சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது கிராம மக்களுக்கு ஆதரவாக ராமதாஸும் குரல்கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகேஉள்ள காட்டாங் கொளத்தூர், திருப்போரூர் ஆகிய பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட புறம் போக்கு மற்றும் தரிசுநிலங்களை துணை நகரத் திட்டத்திற்காகப் பயன்படுத்தப் போவதாக செய்திகள் கூறுகின்றன.
இப்பகுதியில் உள்ள 132 கிராமங்களைச் சேர்ந்த புறம்போக்கு, தரிசு நிலம மற்றும் விவசாய நிலங்களை அழித்து,பாழ்படுததி அங்கு துணை நகரம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தத் திட்டத்தை உடனடியாக வேறு பகுதிக்கு அரசு மாற்றவேண்டும். இல்லாவிடடால் 132 கிராம மக்களையும்சேரத்து நானே தலைமை தாங்கி போராட்டத்தில் ஈடுபட நேரிடும். அது போன்ற ஒரு சூழ்நிலையை அரசுஏற்படுத்தி விடக் கூடாது.
அரசின் துணை நகரம் திட்டத்தை இப்பகுதி கிராமத்தினர் ஏற்கவில்லை. பல்லாண்டுகளாக முறையானபட்டாக்களுடன் இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் திடீரென ஒரு புதிய இடத்திற்கு மாறுவதற்குமுன்வரவில்லை.
அரசு இதை புறக்கணிக்கக் கூடாது. கிராம மக்கள் போராட்டப் பாதைக்கு போவதற்கு முன்பாகவே இத்திட்டத்தைஅரசு கைவிட்டு விட்டு வேறு இடத்தில் இதை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
வண்டலூருக்குப் பதில் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயத்திற்குப்பயன்பட முடியாத ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. துணை நகரத்தை அங்கு அமைக்கலாம்.
சென்னை நகரின் நெரிசலைக் குறைக்க துணை நகரம் அமைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம்,கிராம மக்களின் உயிர் நாடியான விவசாய நிலங்களை பாழ்படுத்தித்தான் இந்தத் திட்டத்தை அமைக்க வேண்டும்என்றால் அதை நாங்கள் வரவேற்க மாட்டோம்.
ஏற்கனவே விவசாயம் சரியாக இல்லாததால் தான் கிராம மக்கள் நகரங்களுக்கு இடம் பெயரந்து வருகின்றனர்.இந்த நிலையில அரசாங்கமே விவசாய நிலங்களை அழித்தால் நிலைமை இன்னும் மோசமாகத் தான் முடியும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கிராமங்கள்தான் சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்கு பெரிய அளவில்கைகொடுக்கின்றன. இந்த நிலையில் இப்பகுதி விவசாய நிலங்களை அழித்து விட்டால் நிலத்தடி நீர் கெட்டுப்போய் சென்னையின் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்று கூறியுளளார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications