நான் யார் பின்னாலும் போக மாட்டேன்: விஜயகாந்த்
விருத்தாச்சலம்:
நான் யார் பின்னாலும் போக மாட்டேன். என் பின்னால் வர விரும்புபவர்கள் தாராளமாக தேமுதிகவில் சேர்ந்துவரலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளர்.
கடந்த பல ஆண்டுகளாகவே தனது பிறந்த நாளை கொண்டாட விஜயகாந்த் நேற்று தனது 55வது பிறந்த நாளைவிருத்தாச்சலத்தில் தொகுதி மக்கள் மத்தியில் கொண்டாடினார்.இதற்காக சென்னையிலிருந்து மனைவி பிரேமலதா, 2 மகன்களுடன் விருத்தாச்சலம் வந்த விஜயகாந்த்,அங்குள்ள கல்யாண மண்டபத்தில் வைத்து தனது தொகுதி மக்களின் வாழ்த்துதக்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசுகையில், 100 நாட்களை கடந்து விட்டது திமுக அரசு. பலநலத்திட்டங்களை அறிவித்து வருகின்றனர். சட்டமன்றம் நடைபெறும் விதம் திருப்திகரமாக இல்லை.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பேசுவதற்கே நேரம் ஆகி விடுகிறது. மற்ற கட்சியினருக்கு போதுமான நேரம்கிடைப்பதில்லை.
வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம். யாருடனும் கூட்டணி கிடையாது. நான் யார்பின்னாலும் போக மாட்டேன். என் பின்னால் வர விரும்புவோர் தாராளமாக கட்சியில் சேர்ந்து வரலாம்.
தேமுதிகவில் 1 கோடி பேர் உறுப்பினரகளாக உள்ளநர். இவர்களுக்கு விரைவில் உறுப்பினர் அட்டைகொடுக்கப்படவுள்ளது.
ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் சேர்ந்து விட்டதாக கூறப்படுவது தவறு. அப்படி யாரும் சேரவில்லை.
இலங்கை பிரச்சினை குறித்து ஆளாளுக்கு எழுதுகிறார்கள். பேசுகிறாரக்ள். உண்மை என்ன என்பதை அங்கேபோய் பார்த்தால் தான் தெரியும். இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கு பரிவும், பாசம் நிறையவே உண்டு.அவர்களுக்காகத் தான் நான் பிறந்த நாளே கொண்டாடமல் இருந்து வந்தேன்.
இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications