மாஜி காதலியின் கல்யாணத்தை தடுக்கும் சாப்ட்வேர் என்ஜினியர்
சென்னை:
தனது கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தி பிரச்சினை செய்வதாக முன்னாள் காதலன் மீதுபெண் என்ஜீனியர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்ப்பவர் சொப்னா. கேரளாவைச்சேர்ந்த இவர் சென்னை வேளச்சேரியில் தனது பெற்ரோருடன் வசித்து வருகிறார்.நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், கேரளாவைச் சேர்ந்த விஜயக்குமார் என்றசாப்ட்வேர் என்ஜீனியருக்கும் இடையே சாட்டிங் மூலம் நட்பு ஏற்பட்டது.
இருவரும் இன்டர்நெட் மூலம் நட்பை வளர்த்தனர். தங்களது புகைப் படங்களையும்மெயில் மூலம் பரிமாறிக் கொண்டனர். இதையடுத்து இருவரும் சந்தித்துப் பேச, நட்புகாதலாக மாறியது.
அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்தனர். இப்படியே 4 ஆண்டுகள் ஓடி விட்டன.இருவரது வீடுகளுககும் இந்தக் காதல் தெரிய வந்தது. இருவரும் மலையாளிகள்என்பதால் பிரச்சினை செய்ய பெற்றோர்கள் விரும்பவில்லை.
கேரளாவுக்குச் சென்று மாப்பிள்ளை வீட்டாரைச் சந்தித்தனர் சொப்னா குடும்பத்தினர்.அதேபோல மாப்பிள்ளை வீட்டாரும் செனைக்கு வந்து பெண்ணைப் பார்த்தனர். இருவீட்டாருக்கு பிடித்துப் போனதால் அடுத்த கட்டமாக ஜாதகம் பார்க்கும் படம் நடந்தது.
இந் நிலையில் சொப்னாவின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக கேரள ஜோசியர்சொல்லியதால் திருமணப் பேச்சுக்களை விஜயக்குமார் வீட்டினர் முறித்துக்கொண்டனர்.
இதனால் மனம் உடைந்தார் சொப்னா. அவரைத் தேற்றிய பெற்றோர், வேறுமாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்குசொப்னாவும் ஒத்துக்கொண்டார்.
சென்னையைச் சேர்ந்த ஒரு மலையாள மாப்பிள்ளையை பேசி முடித்தனர். இந்தத்தகவல் விஜயக்குமாருக்கு தெரிந்தது. உடனடியாக சொப்னாவை தொலைபேசியில்தொடர்பு கொண்ட விஜயக்குமார், என்னை விட்டு விட்டு உனக்கு கல்யாணமா, நீநிம்மதியாக இருந்து விடமுடியுமா, விட மாட்டேன் என மிரட்டினார்.
மேலும், சொப்னாவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் இ மெயில் ஐடியையும்எப்படியோ டிரேஸ் செய்து அவருக்கு தானும் சொப்னாவும் சேர்ந்து இருப்பது போன்றபுகைப்படங்களை அனுப்பினார்.
இதனால் அந்த மாப்பிள்ளை சொப்னாவை மணக்க மாட்டேன் என்று கூறி விட்டார்.இதனால் கல்யாணம் நின்று போனது.
இதையடுத்து சொப்னாவின் பெற்றோர் விஜய்குமார் மீது போலீஸில் புகார்கொடுத்துள்ளனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications