ராணுவம் முன்னேற முயற்சி-தடுத்து நிறுத்தும் புலிகள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

திரிகோணமலை அருகே புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்துமோதல் நடந்து வருகிறது.

துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்து புலிகளை வெளியேற்ற ராணுவம்தாக்குதல் நடத்தி வருகிறது. புலிகள் பதிலடித் தாக்குதல் நடத்தி ராணுவத்தினரைதடுத்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதலில் 13 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர். 71 பேர்காயமடைந்துள்ளனர். புலிகள் தரப்பில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ராணுவதாக்குதலில் 20 தமிழர்களும் பலியாகியுள்ளனர்.

திரிகோணமலை அருகே மூதூர்-சம்பூர் பகுதிகள் அடுத்தடுத்து உள்ளன. மூதூர் பகுதிராணுவத்தின் கட்டுப்பாட்டிலும் சம்பூர் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.இதில் சம்பூரை விட்டு புலிகளை விரட்ட ராணுவமும் மூதுருக்குள் ஊடுருவ புலிகளும்முயன்று வருகின்றனர்.

ஆனால், ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த மோதலில் புலிகள் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் ராணுவத்தால் ஊடுருவ முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் சிலை-சேதப்படுத்திய ராணுவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை தார் பூசி இலங்கை ராணுவ வீரர்கள்அவமரியாதை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தை ராணுவத்தின் பிடியில் இருந்து மீட்க விடுதலைப் புலிகள்தீவிரசண்டையில். புலிகளின் பிடி இறுகி வருவதால் யாழ்ப்பாணத்தில் வசிக்கும்அப்பாவித் தமிழர்களை குறி வைத்து தாக்கி வருகிறது ராணுவம்.

ராணுவத்தின் தாக்குதலுக்குப் பயந்து லட்சக்கணக்கான தமிழர்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறி காடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். மற்றவர்கள்வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந் நிலையில் வல்வெட்டித்துறையில் உள்ள முன்னாள் தமிழகமுதல்வர்எம்.ஜி.ஆரின் சிலையை ராணுவ வீரர்கள் தார் பூசி அவமரியாதை செய்திருப்பாததெரிய வந்துள்ளது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த ஆண்டுதான்இங்கு நிறுவப்பட்டது.

இந்த சிலை மீது தார்பூசியும், சிலையை சேதப்படுத்தியும் ராணுவம் தனதுஆத்திரத்தைக் காட்டியுள்ளது. ராணுவத்தினரோடு, துணை ராணுவக் குழுக்களும் இந்தசெயலிலில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

76 தமிழர்கள் கைது:

இதற்கிடையே,கொழும்பு நகரில் 76 தமிழர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.விமானம் நிலையத்தை தகர்க்க நடந்த பெரும் முயற்சி 2 நாட்களுக்கு முன்கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்ட்து.

கண்ணிவெடிகள் உள்ளிட்டவை விமான நிலையம் அருகே சிக்கின. இதுதொடர்பாக18 பேரை அதிரடிப் படை போலீஸார் கைது செய்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து கொழும்பு நகர் மற்றும் புற நகர்ப் பகுதிகளில் தீவிர வேட்டைநடந்தது. இதில் 76 தமிழர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களை காவல்நிலையங்களுக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+