நெருங்குகிறது எர்னஸ்டோ: பீதியில் புளோரிடா!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவின் புளோரிடா மாநில கடற்கரைப்பகுதியை நோக்கி எர்னஸ்டோசூறாவளி நெருங்கி வருவதால் அந்த மாநிலத்தில் பெரும் பீதி நிலவுகிறது.

சில நாட்களுக்கு முன்பு கியூபா மற்றும் ஹைதி தீவுகளை எர்னஸ்டோ சூறாவளி புயல்தாக்கியது. இதில் சிலர் பலியாயினர். இந்த நிலையில் தற்போது எர்னஸ்டோ,அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

புளோரிடாவின் தெற்கு கடற்கரையை நோக்கி சூறாவளி நகர்ந்து வருவதால்அப்பகுதியில் வசித்து வரும் 1லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து பாதுக்பாபனஇடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

புளோரிடா முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தகைய நிலையையும்சமாளிக்கும் வகையில் மீட்புப் படையினர்தயார் நிலையில் வைக்கப்படடுள்ளனர்.பள்ளிகள், கல்லூரிகள, அலுவலகங்களுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது.

புளோரிடா மாநிலத்தின் கேப்கனரவல் என்ற இடத்தில் தான் ராக்கெட் ஏவு தளம்உள்ளது. அங்கு அட்லாண்டிஸ் விண்கலம் ஏவுவதற்கு தயார் நிலையில்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சூறாவளி வந்து விட்டதால் அட்லாண்டிஸ்ஏவுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு கருதி அட்லாண்டிஸ் விண்கலம், வேறு இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ம்தேதி அட்லாண்டிஸ் விண்ணில் ஏவப்படும் எனஅறிவிக்கபப்ட்டுள்ளது.

இன்று இரவுக்குள் புளோரிடாவை எர்னஸ்டா தாக்கும் என எதிர்பார்க்கபபடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+