என் பெயரை லட்சார்ச்சனை போல சொல்லலாம்: கருணாநிதி
சென்னை:
கருணாநிதி, கருணாநிதி, கருணாநிதி என எனது பெயரை லட்சார்ச்சனை போலஅதிமுகவினர் சொல்லலாம். எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை என்று முதல்வர்கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் அதிமுக உறுப்பினர் சேகர்பாபு பேசுகையில், முதல்வரின் பெயரைகருணாநிதி என குறிப்பிட்டுப்பேசினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். சபாநாயகரும் சேகர்பாபு கருணாநிதி என்று அழைத்துப்பேசியதைஅவைக் குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.இதையடுத்து அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம்நடந்தது. அதிமுகவினரை ஓ.பன்னீர்செல்வம், திமுகவினரை அமைச்சர்களும்அமைதிப்படுத்தினர். பின்னர் முதல்வர் கருணாநிதி எழந்து பேசுகையில்,
இங்கே எனது பெயரை சொல்லி உறுப்பினர் சேகர்பாபு பேசியதால் எனக்கு எந்தஅவமானம் வந்து விடாது. கருணாநிதி என்று எனது பெயரை சொல்வதில் தவறுகிடையாது. எனது தந்தை முத்துவேலரும், தாயார் அஞ்சுகம் அம்மையாரும் எனதுபெயரை கருணாநிதி என்று சொல்வதற்காகத் தான் அந்த பெயரைவைத்திருக்கிறார்கள்.
உறுப்பினர் சேகர்பாபு கருணாநிதி என்று வேண்டும் என்றே சொல்லவில்லை. இங்கேமுன்னாள் முதல்வர் பெயரை சொன்னதால் தான் பதிலுக்கு அவரும் கருணாநிதி என்றுசொல்லியிருக்கிறார். நீங்கள் இருதரப்பினரும் போடும் சண்டையில் எங்களதுஇரண்டு பேரின் தலையும் தான் உருளுகிறது.
நான் பேசும் போது கூட முன்னாள் முதல்வரை அம்மையார் என்று மரியாதைகொடுத்து தான் பேசுவேன். கருணாநிதி என்று சொல்லக் கூடாது என்று கூறுகிறஅளவுக்கு நான் அகம்பாவம் பிடித்தவன் அல்ல.எனது பெயரை எத்தனை முறை வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும்லட்சாரச்சனை போல அழைக்கலாம்.
தப்பில்லை. உங்களது வாக்குவாத்ததை தெருவில் வைத்துக் கொண்டால் கவலைஇல்லை. இந்த அவையில் அது வேண்டாம்.கருணாநிதி, கருணாநிதி, கருணாநிதி என தாராளமாக எனது பெயரை லட்சார்ச்சனைசெய்வது போல சொல்லுங்கள், கூப்பிடுங்கள்.
ஆனால் சட்டசபையில் ஒருமரபை உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்தவகையில்,எதிர்க்கட்சித் தலைவரை குறிப்பிடும்போது முன்னாள் முதல்வர் என்று தான் சொல்லவேண்டும் என்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications