குடிப்பதை தட்டிக் கேட்ட மகளை எரித்துக் கொன்ற தந்தை!
சென்னை:
குடிப்பழக்கத்தையும், தாயைக் கண்டிப்பதையும் நிறுத்தக் கூடாதா என்று தட்டிக் கேட்ட மகளை தீ வைத்துஎரித்துக் கொன்றார் தந்தை.
சென்னை கண்ணதாசன் நகர் 8வது பிளாக்கைச் சேர்ந்தவர் சேகர். 60 வயதாகும் சேகர் மத்திய அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலா. இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுபடுத்த படுக்கையாகஇருக்கிறார்.இவர்களது மகள் பவித்ரா (14) 7 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தாய்க்கு உதவியாக இருக்க வேண்டும்என்பதற்காக அதற்கு மேல் படிக்கவில்லை.சேகர் குடிப்பழக்கம் உடையவர். தினசரி குடிப்பார். குடிக்க பணம் கேட்டு கலாவை துன்புறுத்துவாராம்.மகளையும் அவர் பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார்.
நேற்றும் வழக்கம் போல கலாவிடம் தகராறு செய்துள்ளார். இதைப்பார்த்து வேதனை அடைந்த பவித்ரா, இப்படிதினசரி அம்மாவைப் போட்டு கொடுமைப்படுத்துகிறீர்களே, குடிப்பழக்கத்தை தொலைத்தால் தான் என்ன என்றுகோபமாக கேட்டுள்ளார்.இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சேகர், ஆத்திரம் கண்ணை மறைக்க, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்துபவித்ரா மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடினார்.
உடல்முழுவதும் எரிந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பவித்ரா இன்று காலைபரிதாபமாக உயிரிழந்தார்.தப்பி ஓடிய சேகரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications