எம்.ஜி.ஆர். சிலைக்கு கருணாநிதி போட்ட முட்டுக்கட்டை: ஜெ.
சென்னை:
நாடாளுமன்ற வளாகத்தில்முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை திறக்க விடாமல் முதல்வர் கருணாநிதிதடுத்து விட்டார் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மிகுந்த சிரமத்திற்குப் பின்னர் எம்.ஜி.ஆர். சிலைஉருவாக்கப்பட்டு டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிலையை குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் திறந்துவைப்பதாக இருந்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த நிகழ்ச்சி ரத்தாகி விட்டது.திமுக தலைவர் கருணாநிதியின் ரகசிய வேலைகள்தான் இதற்குக் காரணம். சிலையை நறுவியது அதிமுகஎன்பதால், நான் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவேன், குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளக் கூடாது என்பதுதான் இந்த முட்டுக்கட்டைக்கு ஒரே காரணம்.
எம்.ஜி.ஆர் சிலையுடன் சேர்த்து திறக்கப்படுவதாக இருந்த சுவாமி விவேகானந்தர், கிட்டூர் ராணிசென்னம்மா,தேவி அஹில்யாபாய் ஹோல்கர், விட்டல் பாய்படேல், பூபேஷகுப்தா,அரவிந்தகோஷ் ஆகியோரதுசிலைகள்பின்னர் எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். சிலைமட்டும் திறக்கப்படாமல்முடக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், இலங்கையில் எம்.ஜி.ஆர்.சிலையை இலங்கை ராணுவம்தார் பூசி சேதப்படுத்தியிருப்பது அநாகரிகச் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நிறுவப்பட்டிருந்தஎம்.ஜி.ஆர். சிலை மீது தார் பூசி அதை சேதப்படுத்தியுள்ளனர். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் படித்துஅதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இந்த அநாகரீக செயல் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் மனதை புண்படுத்தும் செயலாகும். இதற்குஎனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications