தமிழ் மண்ணின் பிழையை மன்னியுங்கள்: வைரமுத்து உருக்கம்
சென்னை:
சீககிய மண்ணின் பிழையை (இந்திரா காந்தி படுகொலை) மன்னித்த சோனியா காந்தி அம்மையார், தமிழ் மண்செய்த பிழையையும் (ராஜீவ் காந்தி படுகொலை) மன்னித்து ஈழத் தமிழர்களின் அவலம் தீர உதவ வேண்டும்என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
தமிழர் பேரவை சார்பில் இலங்கையின் செஞ்சோலை முகாமில் இலங்கை விமானத்தாக்குதலில் உயிர் நீத்தகுழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்பட்டது.செஞ்சோலை முகாமில் உயிரிழந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகு வர்த்திகள்ஏற்றப்பட்டன. சுப. வீரபாண்டியன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தை தமிழக மின்துறை அமைச்சர்ஆற்காடு வீராசாமி தொடங்கி வைத்தார்.
திரைத்துறையினர் , கவிஞர்கள், தமிழறிஞர்கள் மற்றும் பல்துறை பிரமுகர்கள் ஏராளமானோர் இந்தஉண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். கவிப் பேரரசு ரைவமுத்து நிகழ்ச்சியில் உருக்கமாக பேசினார்.
இலங்கை முல்லைத் தீவில்செஞசோலை பிஞ்சுகளுககாக கனத்த மனத்தோடு இங்கே கண்ணீர் அஞ்சலிசெலுத்தகூடி இருக்கிறோம். பறித்து வைக்கப்பட்ட காய்கறிகளாக அடுக்கி வைக்கப்பட்ட பிஞ்சுப் பிணங்களைப்பார்க்கும் போது நெஞ்சு வெடிக்கிறது.
கும்பகோணம் தீவிபத்தில் இறந்து போன கொழுந்துக் குழந்தைகளுக்காக தமிழ்நாடு எழுந்து நின்று அழுதது.கும்பகோணத்தில் நடந்தது விபத்து, செஞ்சோலையில் நடந்தது படுகொலை. விபத்துக்கு அழுகிற தமிழா,கொலைக்கு அழ மாட்டாயா என்று கேட்கத் தோன்றுகிறது.
ஈழத்தமிழினம் யுத்தத்தில் அழிந்து விடுமோ என்ற அச்சம் இங்கே எழுப்பப்பட்டது. ஆனால் அது அவ்வளவுஎளிதானதல்ல. யுத்தத்தால் புலிகளை வெல்ல முடியாது என்ற உணர்வு சிங்கள ராணுவத்திற்கு இப்போதுஏற்பட்டுள்ளது. தமிழன் செயவது உணர்ச்சிகரமான யுத்தம். இனம் காக்க, நலம் மீட்க அவன் புரியும் யுத்தம்சத்தியமானது.
உணர்ச்சியுள்ள யுத்தம் தான் வலிமையானது. ஒருசிங்கம் முயலைத் துரத்தும் போது சிங்கத்தின் வேகம் அதிகமா?முயலின் வேகம் அதிகமா? என்று கேட்டால், முயலின் வேகம்தான் அதிகமாக இருக்கும். தமிழன் இன மானம்காக்க போராடும் போது அவன் போர் தான் வெல்லமுடியாததாக இருக்கும்.
இலங்கைத் தமிழர்களின் துயரத்தில பங்கேற்கும் விதமாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர்கருணாநிதியின் உள்ளத்தின் வலிமையை உணர்கிறோம். இந்திய அரசுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். சிங்களஅரசுக்கு எந்த நிலையிலும், ஆயுதங்களை வழங்கி விடாதீர்கள். அது தமிழர்களுக்கு ஆபத்து.
பாகிஸ்தானிடமிருந்தும் சிங்கள அரசு ஆயுதங்கள் வாங்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுஇந்தியாவுக்கே ஆபத்து. இரண்டிலும் இந்திய அரசு கவனடன் இருக்க வேண்டும்.
சோனியா காந்தி அம்மையாருக்கு இந்த நேரத்தில ஒரு வேண்டுகோள். நீங்கள் தியாக திருவிளக்கு. பாரதபிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தீர்களே, அதற்காக சொல்லவில்லை. உங்களது மாமியார் இந்திரா காந்தியைசுட்டு வீழ்த்தியவர் ஒருசீக்கியர். ஆனால் அந்த பழைய சோகத்தை மன்னித்து விட்டு ஒரு சீக்கியரையே இந்தியநாட்டுப் பிரமதர் ஆக்கினீர்களே. அதுதான் உங்கள் தியாகத்தின் உச்சம்.
சீக்கிய மண்ணின் பிழைய மன்னித்த நீங்கள், தமிழ் மண் செய்த ஒரு பிழையை மன்னிக்கக் கூடாதா? உங்களசோகம் பெரியது. நிகழ்ந்திருக்கவே கூடாது. ஆறுதல் மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அதையும் தாண்டி அந்தப்பிழையை நீங்கள் மறந்து மன்னித்தால் சிகரத்தின் உச்சிக்கே சென்று விடுவீர்கள்.
இலங்கைத் தமிழர்களின் அவலம் தீரட்டும். அங்கே ஒரு நிரந்தர விடியல் வேண்டும் என்றார் வைரமுத்து.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications