விநாயகர் சிலை கரைப்பு: மீன்கள் தாக்கி 50 பேர் காயம்!
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூரில் விநாயகர் சிலைகளை கரைத்த போது திருக்கை மீன்கள் தாக்கியதில் 50 பேர்காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடந்தன.ஊர்வலத்தின இறுதியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடலில் சிலைகள்கரைக்கப்பட்டன.தேவனாம் பட்டனம் கடல்பகுதியிலும் ஏராளமான விநாயகர் சிலைகள் கடலில்கரைக்கப்பட்டன. கடலுக்குள் சிலைகளுடன் சென்றவர்கள் திடீரென அலறினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பலர் கடலிலிருந்து ஓடி வந்து கடற்கரையில் விழுந்து துடித்தனர். பலர்மயக்கமடைந்தனர். அவர்களது காலிலிருந்து ரத்தம் கொட்டியது. கடலில் ஏதோதங்களைக் கடித்ததாக துடித்தவர்கள் கூறினர்.
கடலில் உள்ள திருக்கை மீன்கள் தான் அவர்களை கடித்திருக்க வேண்டும் என்றுமீனவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வண்டிகளில் ஏற்றப்பட்டுமருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அரசு மருத்துவமனையில்அவர்களுக்கு கட்டு போட்டு மருந்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications