அக்டோபர்-2 முதல் வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை
சென்னை:
வேலை வாய்ப்பில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல்உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை:படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல்பல்லாண்டு காலமாகக் காத்திருக்கும் இளைஞர்களின் துயரினைத் துடைக்கும் வகையில் இந்த திட்டம்அமலாக்கப்படுகிறது.
இந்த உதவித் தொகை பெற தேவையான கல்வித்தகுதி மற்றும் மாதாந்திர உதவித் தொகை விவரங்கள்,
எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ரூ.150, பிளஸ் 2, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி ரூ. 200, பட்டக் கல்வி மற்றும் முதுநிலைப்பட்ட கல்வி ரூ.300. வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவரைப்பொறுத்த மட்டில் 45 வயது வரையிலும், மற்றவர்களுக்கு 40 வயது வரையும் வழங்கப்படும்.
பயனாளிகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவேடுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டு காலமாவது காத்திருக்கவேண்டும். வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை ஒவ்வொரு காலாண்டும் வங்கி வரைவோலைகளாகவழங்கப்படும்.
பயனாளிகள் வங்கிகளில் தொடங்கப்படுகின்ற சேமிப்புக் கணக்குகளின் மூலம் வங்கி வரைவோலைகளைகாசாக்கிப் பெற்றுக் கொள்ளலாம். பயனாளிகள் வருமானம் உள்ளிட்ட இதர அம்சங்கள் குறித்த ஒட்டு மொத்தச்சான்றிதழை வருவாய்த்துறையில் ஒரு முறை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இது தவிர ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் பணியில் இல்லை என்பதற்கான சுய உறுதிமொழியைஅளிக்க வேண்டும். உதவித் தொகை அடுத்த காலாண்டு முதல் வழங்ப்படும்.
இந்தத் திட்டம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்கப்படும்.
பயனாளி அரசுத்துறை அல்லது தனியார்துறை அல்லது எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபட்டவராக இருந்தல் கூடாது. பயனாளி முற்றிலுமாக வேலை இல்லாதவராக இருத்தல்வேண்டும்.
பயனாளியின் தாய், தந்தை அல்லது கணவன் அல்லது மனைவி ஆகியோரின் மாத வருமானம் ரூ. 2,000க்குமிகாமலும் அல்லது ஆண்டு வருமானம் ரூ. 24,000க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
பயனாளி தனது பள்ளி அல்லது கல்லூரிக் கல்வியினை முழுவதுமாக தமிழ்நாட்டிலேயே முடித்திருக்க வேண்டும்அல்லது பேற்றோரில் ஒருவர் அல்லது பாதுகாவலர் அல்லது கணவன் அல்லது மனைவி குறைந்தபட்சம் 15ஆண்டுகாலம் தமிழ்நாட்டிலேயே குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.
அல்லது தனியார் ஆதாரங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல்கூடாது. பயனாளி அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவ, மாணவியராக இருந்தல் கூடாது. இந்நிபந்தனை தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக் கல்வி கற்கும் பயனாளிகளுக்கு பொருந்தாது.
பயனாளி உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்துவருபவராக இருந்தால் வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications