துணை நகரம்-கருணாநிதி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே புதிய துணைநகரம் அமைக்கப்படுவதன் மூலம் ஏற்கனவே அங்குவசித்து வரும் மக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.

சென்னை அருகே துணை நகரம் (சாட்டிலைட் டவுன்) அமைக்க தமிழகஅரசுதிட்டமிட்டுள்ளது. வண்டலூர்அருகே இந்த துணை நகரம் அமையவுள்ளது.இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 44 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பாமகவும் கிராம மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.

இதனால் திமுக, பாமக இடையே மோதல் ஏற்படக் கூடிய சூழ்நிலைஉருவாகியுள்ளது.

இநி நிலையில் சட்டசபையில் இன்றுமுதல்வர் கருணாநிதி விதி எண் 110ன் கீழ் சிலவிளக்கங்களை வெளியிட்டார். அவர் கூறுகையில்,

சென்னை நகரில் பெரும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில்சென்னை நகர மக்கள் தொகை 1.25 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே சென்னை நகர மக்களின்அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்,30,000 ஏக்கர் பரப்பளவில் சென்னை அருகே ஒரு துணை நகரம் அமைக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

இந்த துணை நகரம் வண்டலூர், கேளம்பாக்கம் இடையே அமையும். பழையமகாபலிபுரம் சாலைக்கும்,தேசிய நெடுஞ்சாலைக்கும் (ஜிஎஸ்டி சாலை) இடையேமொத்தம் 1.40 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது.

அதிலிருந்து 30,000 ஏக்கர் நிலம் மட்டுமே துணை நகரத்திற்காககையகப்படுத்தப்படவுள்ளது.

இப் பகுதியில் தற்பொது மொத்தம்13,000 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர். புதியநகரம் உருவாக்கப்படுவதால் இவர்கள்தற்போது வசிக்கும் பகுதியிலிருந்துவெளியேற்றப்பட மாட்டார்கள்.

துணை நகரம் அமைவதால் அப்பகுதியில் தொழில் வளர்ச்சி பெருகும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+