சில்மிஷ அமைச்சரின் பதவி பறிபோகிறது?
திருவனந்தபுரம்:
விமானத்தில் முன்னாள் டிவி நடிகை லட்சுமி கோபகுமாரிடம் சில்மிஷம் செய்ததாகசர்ச்சையில் சிக்கியுள்ள கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் ஜோசப்பின் பதவிபறிக்கப்படும் எனத் தெரிகிறது.
சென்னையில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த லட்சுமி கோபகுமார் கடந்த 3ம்தேதி கொச்சிக்கு விமானம் மூலம் சென்றார். அந்த விமானத்தில் பயணம் செய்தஅமைச்சர் ஜோசப், லட்சுமியின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு கையை விட்டுசில்மிஷம் செய்துள்ளார்.கேரளாவில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து பெண் ஐ.ஜி.சந்தியாவை இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கேரள முதல்வர் அச்சுதானந்தன்உத்தரவிட்டார். இதையடுத்து சந்தியா தனது விசாரணையை தொடங்கினார்.
விசாரணையின் ஒரு பகுதியாக சென்னைக்கு வந்து லட்சுமி கோபகுமாரிடம் பலமணிநேரம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் அமைச்சர் தன்னிடம் தவறாகநடந்து கொண்டதை கண்ணீர் மல்க விவரித்துள்ளார் லட்சுமி. அத்தோடு எழுத்துப்பூர்வமாகவும் தனது புகாரை சந்தியாவிடம் கொடுத்தார்.
இதையடுத்து திருவனந்தபுரம் திரும்பிய ஐ.ஜி. சந்தியா, நேற்று அமைச்சர்ஜோசப்பிடம் விசாரணை நடத்தினார். திருவனந்தபுரத்தில் உள்ள ஜோசப்பின் வீட்டில்வைத்து சுமார் 2 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் லட்சுமிகோபகுமார் கூறிய புகார்கள் குறித்து ஜோசப்பிடம் சந்தியா விளக்கம் கேட்டதாகதெரிகிறது.
ஆனால் லட்சுமி கோபகுமாரின் புகார்களை உறுதியாக ஜோசப் மறுக்க முடியவில்லைஎன்று கூறப்படுகிறது. சந்தியா தனது விசாரணையை முடித்துள்ளார். இன்று அல்லதுநாளை அவர் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.
ஜோசப்புக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக கூறப்படுவதால் அவரதுபதவி பறிபோவது நிச்சயம் என்று இடது சாரி கூட்டணி வட்டாரத்தில் உறுதியாககூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications