ராணுவத்தால் 17 தமிழர்கள் கொலை: இலங்கைக்குஉதவிகளை நிறுத்துவோம்-ஐ.நா. எச்சரிக்கை
கொழும்பு:
இலங்கையின் மூதூர் பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ்நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய 17 தமிழர்களை இலங்கைராணுவம் தான் படுகொலை செய்துள்ளது என போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுகுற்றம் சாட்டியுள்ளது.
மூதூரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சமூக சேவை நிறுவனத்தில் பணியாற்றிய 4 பெண்கள் உள்ளிட்ட 17தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் வன்னிக்கு எடுத்துச் செல்லசெஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் முகத்தில் இலங்கைராணுவத்தினர் ஆசிட் ஊற்றி சிதைத்துள்ளனர். இதனால் அவர்களது முகங்கள் சரிவர அடையாளம் கண்டுபிடிக்கமுடியவில்லை.இந்தக் கொலைகளுக்கு ராணுவமே காரணம் என இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்சிக்சன்விசாரணை நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
17 தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை ராணுவமே காரணம். ராணுவம்தான் 17பேரையும் கொடூரமாக கொலை செய்துள்ளது. இது மோசமான, மனிதாபிமானமற்ற படுகொலை.இது தொடர்பான விசாரணையை தடுக்க இலங்கை அரசு முயன்றது.
இதற்கு எங்களிடம் வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது. இதில் விடுதலைப் புலிகள்உள்பட எந்தக் குழுவினருக்கும் தொடர்பு இல்லை.
நாங்கள் விசாரணையில்ஈடுபடட்போது அரசு அதிகாரிகள் அதைத் தடுக்க முயன்றனர்.மூதூர் பகுதியை பார்வையிட எங்களை அனுமதிக்கவில்லை.
இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை தாக்கி வருவதை உடனடியாக நிறுத்தவேண்டும். ராணுவத்தின் போக்கை கண்டிக்காமல் இலங்கை அரசு அமைதி காப்பதுகண்டிக்கத்தக்கது. ராணுவத்தின் இந்தப் படுகொலையை மூடி மறைக்க முயற்சி நடக்கிறது என்றுகூறியுள்ளார்.
இலங்கைக்கு ஐ.நா. எச்சரிக்கை:
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொல்வதை நிறுத்தாவிட்டால் இலங்கைக்கு தரப்படும் அனைத்து உதவிகளும் நிறுத்தப்போவதாக ஐ.நா., எச்சரித்துள்ளது.
ராணுவத்தினர் அப்பாவி தமிழர்கள் மற்றும் சுனாமி உள்ளிட்ட நிவாரண குழுவினரை கொன்று குவிப்பதை நிறுத்த வேண்டும்என இலங்கை அரசிடம் ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இல்லாவிட்டால் இலங்கைக்கு அளிக்கப்படும் அனைத்து உதவிகளும்நிறுத்தப்படும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
டோனி பிளேருடன் ராஜபக்ஷே சந்திப்பு:
இதற்கிடையே இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே அந் நாட்டு பிரதமர் டோனி பிளேரை சந்திக்கிறார்.
அப்போது அப்பாவித் தமிழர்களை கொலை செய்வதை நிறுத்துமாறு இங்கிலாந்து கேட்டுக் கொள்ளும் என அந் நாட்டு வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
அதே நேரத்தில் புலிகளை உலக அரங்கில் தனிப்படுத்த உதவுமாறும், இந்த விவகாரத்தில் இந்தியாவைை தலையிடச் செய்யுமாறும் பிளேரிடம் ராஜபக்சேகோரிக்கை வைப்பார் என்று தெரிகிறது.
கடத்தப்பட்ட தமிழ் பத்திரிக்கையாளர் விடுதலை:
இலங்கையில் கடத்திச் செல்லப்பட்ட சூர்யன் எப்.எம். ரேடியோவின் செய்தி ஆசிரியர் நடராஜா குருபரன்விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இவர் கொழும்பில் உள்ள இவரது வீட்டருகே கடத்திச் செல்லப்பட்டார். இதைக்கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் நேற்று அவர் விடுவிக்கப்பட்டார். தன்னைக் கடத்தியவர்கள் கண்ணைக் கட்டி கொண்டுசென்றதாகவும், மரியாதையாகவே நடத்தியதாகவும் நடராஜா குருபரன் தெரிவித்துள்ளார்.
குருபரனின் விடுதலைக்கு அமெரிக்காவில் உள்ள கமிட்டி பார் புரோடெக்ட் ஜர்னலிஸ்ட் அமைப்பு மகிழ்ச்சிதெரிவித்துள்ளது.
இன்னொரு எம்ஜிஆர் சிலை சேதம்:
இந் நிலையில் பாசையூரில் இருந்த மேலும் ஒரு எம்ஜிஆர் சிலையை இலங்கை ராணுவத்தினர் உடைத்தும்தார்பூசியும் சேதப்படுத்தினர்.
ஏற்கனவே வல்வெட்டித்துறையில் ஒரு சிலையை ராணுவத்தினர் உடைத்தது குறிப்பிடத்தக்கது.
வேலைக்கு போக மறுக்கும் போலீஸ்:
இலங்கையில் போர் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து இலங்கை ராணுவமும், போலீசாரும் போர்பகுதிகளில் குவிக்கப்பட்டு வருகிறார்கள். போலீஸ் துறையில் வட கிழக்கு பகுதிகளுக்கு மாற்றப்பட்டவர்களில் 20போலீசார் அங்கு செல்ல மறுத்து விட்டனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
மலேசிய எம்பி-கருணாநிதி சந்திப்பு:
இலங்கை தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்த மலேஷிய எம்பி குலசேகரன் தலைமையில்தமிழ் அமைப்புகளை சேர்ந்த குழுவினர் தமிழ்நாடு வந்து முதல்வர் கருணாநிதியை சந்திக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications