இலங்கைக்கு ராணுவ உதவி கிடையாது: வைகோவிடம் பிரதமர் உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இலங்கை ராணுவத்தை பலப்படுத்தும் எந்த வகையான உதவியையும் இந்திய அரசுசெய்யாது என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

இலங்கை ராணுவத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், இலங்கைத் தமிழர்களுக்குஆதரவு தெரிவிக்கும் வகையிலும் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம்முன்புவைகோ தலைமையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் வைகோ தலைமையில் மதிமுக எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைசந்தித்தனர். பிரதமரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வைகோ வழங்கினார்.அப்போது இந்த உறுதி மொழியை பிரதமர் அளித்தார்.

வைகோ அளித்த கோரிக்கை மனுவில், இலங்கைத் தீவு இரண்டு நாடுகளைக்கொண்டது. ஒன்று தமிழ் தேசம், இன்னொன்று சிங்கள தேசம். இதை முன்னாள்பிரதமர் இந்திராகாந்தியே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்டதமிழர்கள் இன்று தாய் மண்ணில் உரிமைக்காகப் போராட வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் அத்தனை பேரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகஉள்ளனர். தமிழகத்திற்கு வரும் அகதிகள், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகளிலிருந்து தான் வருகிறார்கள்.

ராணுவம் புலிகளைத் தாக்குவதாக கூறிக் கொண்டு அப்பாவி தமிழர்களைத் தாக்கிவருகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்குவது உள்பட எந்தவித ராணுவ உதவியையும் செய்யக்கூடாது.

இலங்கையில் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. சில செயல்பாடுகளில்இறங்கியுள்ளது. இதை அனுமதிக்கக் கூடாது என இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம்கொடுக்க வேண்டும். அவ்வாறு பாகிஸ்தான் செயல்படுவது இந்தியாவின் நலனுக்குவிரோதமாக முடியும்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா மற்றம் பல்வேறு நாடுகள்வழங்கிய உதவிகள், இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு போய்ச்சேரவில்லை. அவர்களுக்கு இந்தியா உதவ வேண்டும்.

இலங்கையிலிருந்து வரும் அகதிகளை தனுஷ்கோடியில் கரையிறக்கி விட்டு விட்டுபடகுகள் திரும்பிச் செல்ல இந்திய கடற்படை அனுமதிக்க வேண்டும்.

அகதிகளுக்கு உணவு, துணி, மருந்து ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். அகதிகளுக்கான படியை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.

பிரதமரை சந்தித்த பின்னர் செயதியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கைராணுவத்திற்கு எந்த வித உதவியும் வழங்கப்பட மாட்டாது என்று பிரதமர் உறுதிஅளித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 22 தமிழ் எம்.பிக்கள் தங்களை சந்திக்க விரும்புவதாகபிரதமரிடம் கூறினேன். அதற்கு பிரதமர், இது தொடர்பாக அப்பாயிண்ட்மென்ட்கேட்டு எழுதச் சொல்லுங்கள். அப்படி ஒரு கோபரிக்கை வந்தால் நிச்சயம் நான்சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் எம்.பிக்கள் பிரதமரை சந்திக்கும் போது மதிமுகவைச் சேர்ந்த நான்குஎம்.பிக்களும் அக்குழுவில் இடம்பெறுவர் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+