தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு-எதிர்த்து வழக்கு:9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கிறது
டெல்லி:
கோவை சிறையில், தன்னைப் பார்க்க வந்த குடும்பத்தினரை அவமதித்த காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குண்டுவெடிப்பு கைதி நாசர் என்பவர்தொடர் உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளார்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரும்சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டால் சமூகரீதியில் ஒரு பயனும் ஏற்படாது என்றுஇதை எதிர்ப்பவர்கள் கூறி வருகின்றனர்.ஆனால், இட ஒதுக்கீடு வழங்கியதால் தமிழகத்தில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்கள்அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நிதியமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்கள் சுட்டிக் காட்டி இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து பேசி வருகின்றனர்.
இந் நிலையில் தமிழகத்தில் 69 சதவீதம் அளவுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதில்,
மண்டல் கமிஷன் வழக்கில் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடே வழங்கவேண்டும் என 1992ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த ஒதுக்கீட்டுக்கும் அதிகமாக 69 சதவீதம் இட ஒதுக்கீடுஅளிக்கப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே இதை 50 சதவீதமாக்க உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் தாக்கர், பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறபித்த உத்தரவு:
இந்த மனுவை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. இது தொடர்பாகயாராவது மனு தாக்கல் செய்ய விரும்பினால் செப்டம்பர் 27க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த மனு மீது அக்டோபர் 9ம் தேதி முதல் விசாரணை தொடங்கி 13ம் தேதி வரை நடக்கும் என்று நீதிபதிகள்தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
தனியார் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு:இதற்கிடையே மத்திய அரசின் உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் முடிவு செய்துள்ளார்.
இதற்கான மசோதா உரிய நேரத்தில் கொண்டு வரப்படும் என்றும், அதற்காக நீங்கள் (நிருபர்கள்) நீண்ட நாள்காத்திருக்கத் தேவையில்லை என்றும் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரபிடிவாதமாக இருந்து அதற்கான மசோதாவைக் கொண்டு வந்தவர்களில் அர்ஜூன் சிங் முக்கியமானவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் ஒரு தரப்பினர் மற்றும் சில பத்திரிக்கைகளின் தீவிர எதிர்ப்பை சந்தித்து வருகிறார்சிங்.
நாடாளுமன்றமே உயர்ந்தது: ராமதாஸ்
இதற்கிடையில் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், தமிழக கல்வி நிறுவனங்களில் 69 சதவீதஇடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தம் அரசியல் சட்டப்படி செல்லுமாஎன உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதே நேரத்தில், இந்த சட்டத் திருத்தத்தை அரசியல் சட்டத்தின் 9வது பிரிவில்சேர்ப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை 9 பேர்கொண்ட பெஞ்ச் பரிசீலனைக்கு உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ளது.
நீதித்துறை அதன் அளவிலேயே இருக்க வேண்டும். தனது எல்லைக்குள்ளேயேசெயல்பட வேண்டும். சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களவலிமையானவை, நீதித்துறையை விட உயர்ந்தவை. சமூகத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டுமானால் அது நீதிமன்றங்களால் முடியாது.
நாடாளுமன்றத்தால் தான் இது சாத்தியமாகும். நீதித்துறை தனது எல்லையை மீறகூடாது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது தவறா, சரியா என்று சுட்டிக்காட்டக்கூடாது என்று லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியுள்ளார். இதை நான்வரவேற்கிறேன்.
இதுகுறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும். செப்டம்பர் 3ம் தேதிடெல்லியில் இதுதொடர்பாக முதலாவது விவாதக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல சென்னை,மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் இந்த விவாதம்நடைபெறும்.
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் பாமக யாருக்கும் எதிராக இல்லை. எந்தக் கட்சிமீதும் பாமகவுக்கு தனிப்பட்ட கோபம் கிடையாது.
இடஒதுக்கீடு விவகாரத்தில் உள்ளே என்ன நடந்தது என்பதை மட்டுமே நாங்கள்தெரியப்படுத்த விரும்பினோம். இந்த சட்ட மசோதா இறுதி வடிவம் பெற்றவிதம்எங்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரவில்லை. இந்த விவகாரத்தைநாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications