டான்சி நிலம் வந்து சேரவில்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி நிலத்தை ஜெயலலிதா இன்னும் அரசிடம் ஒப்படைக்கவில்லை என முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டினார்.

காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாததில் கருணாநிதி பேசுகையில்,

டான்சி வழக்கில் மனசாட்சிப்படி நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்குமாறு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படிநிலத்தை மீண்டும் அரசிடமே தருவதாக அம்மையார் (ஜெயலலிதா) கூறியிருந்தார்.

ஆனால், சொன்னபடி அந்த நிலத்தை இதுவரை அரசிடம் ஜெயலலிதா ஒப்படைக்கவில்லை.

ஏனெனில் ஸ்டாம்ப தொகையாக ரூ. 3.15 கோடி கட்ட வேண்டுமாம். ஸ்டாம்ப் ஒட்டுவதா வேண்டாமா என்றுமுடிவெடுக்காமல் வைத்திருந்தார்கள். அவரிடம் பைல் போனால் தான் திரும்ப வராதே?. அரசுக்கு நிலம் வந்தால்போதும் என்று ஸ்டாம்ப் ஒட்டித் தொலைக்கிறோம் என்று நாங்கள் ஒப்புக் கொண்டிருக்கிறோம் என்றார்.

பின்னர் எதிர்க் கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் குறித்து குறிப்பிட்ட கருணாநிதி,

அவர் சாது. சில நேரம் சாது மிரண்டால் காடு கொள்ளாது. இவர் சூதுவாது இல்லாத சாது என்பதை நான்அறிவேன் என்றார்.

இதையடுத்து பேரவையில் ஆராவாரம் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் தலையை குனிந்தபடி தனது டிரேட் மார்க்சிரிப்போடு அமர்ந்திருந்தார்.

முன்னதாக காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பன்னீர்செல்வம் நீண்ட நேரம் பேசினார்.அவ்வளவு நேரம் பேச அனுமதியளித்த சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு நன்றியும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், இன்று 53 நிமிடங்கள் பேசியிருக்கிறீர்கள். ஆனால், வெளியில் போய் பேசஅனுமதிக்கவில் என்கிறீர்கள். இது நியாயமா என்று சிரித்தபடியே கேட்டார்.

அதற்கு பதிலேதும் சொல்லாமல் சிரித்தபடியே உட்கார்ந்தார் பன்னீர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+