ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை- அமெரிக்கா இன்று சோதனை
வாஷிங்டன்:
ஏவுகணைகளை வானிலேயே எதிர் கெண்டு தகர்த்து அழிக்கும் ஏவுகணை சோதனையை இன்று பசிபிக் கடல்பகுதியில் அமெரிக்கா சோதனையிடவுள்ளது.மிசைல் டிபென்ஸ் என்ற அதி நவீன பிரமாண்டமான பாதுகாப்புத் திட்டத்தை அமெரிக்கா உருவாக்கி வருகிறது.எதிரி நாட்டு ஏவுகணைகளை வான் பகுதியேயே தடுத்து சிதறச் செய்யும் திட்டம் இது.
செயற்கைக் கோள்கள், விமானங்கள், நீர்மூழ்கிகள், கப்பல்கள், ரேடார்கள் உதவியோடு எதிரி நாட்டுஏவுகணைகளை வானில் தடுத்து தகர்க்கும் தொழில்நுட்பம் இது.
இந்த சோதனைகளை 2004, 2005ம் ஆண்டுகளில் அமெரிக்கா நடத்தியது. ஆனால், இருமுறையும் முழுமையானவெற்றி கிடைக்கவில்லை. செலுத்தப்பட்ட 10 ஏவுகணைகளில் 5 தான் இலக்கைத் தாக்கி சிதறடித்தன.இந் நிலையில் இன்று மீண்டும் சோதனை நடத்தவுள்ளது.
![]() |
வட கொரியா, ஈரான் ஆகிய நாடுகள் என்றைக்காவது ஒரு நாள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைதன் மீது செலுத்தித் தாக்கலாம் என அமெரிக்கா கருதுகிறது. மேலும் சீனா மீதும் அமெரிக்காவுக்கு ஒரு சந்தேகக்கண் எப்போதும் உண்டு.
இதனால் இந்த ஏவுகணை அழிப்பு தொழில்நுட்ப சோதனைகளை அமெரிக்கா விரைவுபடுத்தியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறைக்காக போயிங், லாக்ஹீட் மார்ட்டின், நார்த்ரோப் குரும்மென், ரேதியான் ஆகியவான்-பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள் கூட்டாக இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.
![]() |
இன்று நடக்கும் சோதனையில் அலாஸ்காவின் கோடியாக் பகுதியில் இருந்து ஒரு ஏவுகணை செலுத்தப்படும்.இதை கலிபோர்னியாவில் உள்ள வேண்டர்பெர்க் விமான தளத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை எதிர்ப்புஏவுகணை பசிபிக் கடல் பகுதியில் வானில் வழிமறித்து தாக்கி சிதறடிக்கும்.
இந்தச் சோதனைகள் இதுவரை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என பெரும்பாலான பாதுகாப்புநிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இந்தத் தொழில்நுட்பம் சர்வதேச பாதுகாப்புக்குஆபத்தானது என சீனாவும் ரஷ்யாவின் கூறி வருகின்றன.
இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்காக ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர்களை அமெரிக்க பாதுகாப்பு அமைப்பானபென்டகன் செலவிட்டு வருகிறது. ஆயுத உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்காக பென்டகனுக்கு ஒதுக்கப்படும் நிதியில்பெரும்பாலான நிதி இந்த திட்டத்துக்கே திருப்பி விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications