பாமகவுடன் போருக்கு தயார்- கருணாநிதி
சென்னை:
சென்னை துணை நகரம் தொடர்பாக பாமக போருக்குத் தயாராகி விட்டது எனநினைக்கிறேன். போருக்கு நானும் தயார், ஆனால் அது ஒத்துழைக்கும் போர் என்றுமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று நீதித்துறை, சட்டம், சிறப்புமுயற்சிகள் துறை மீதானமானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.அப்போது பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, சென்னைக்கு அருகே துணை நகரம்அமைப்பதால், ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவர். நாற்பதுக்கும் மேற்பட்டகிராமங்களில் வசிக்கும் 25,00 பேர் பாதிக்ப்படக் கூடும்.அந்த கிராம மக்கள் அனைவரும் பாமக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களிடம் முறையிட்டுவருகிறார்கள். எனவே ஒரே இடத்தில் நிலங்களை எடுக்காமல் பிற இடங்களிலும்நிலத்தை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்றார்.
இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில, துணை நகரம் அமையும் பகுதியில்பயிர் பச்சைகள் இருந்தால் அதனை நெருங்குவதில்லை என அரசு முடிவுசெய்துளஅளது. கோவில் குளங்களையும் நெருங்க மாட்டோம் என்று கூறியுள்லோம.அப்படி உள்ள நிலையிலும் இதனை எதிர்ப்பது தேவையற்றது.
காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி அவர்கள்இதனை நல்ல திடடம் என்று வரவேற்றுள்ளனர். அவர்களது ஒபபுதலையும் வாங்கிவிட்டோம். இடையில் ஒரு தவறு ஏற்பட்டு விட்டது.
பாமக தலைவர்களுடன் பேச ஆற்காடு வீராசாமியிடம் சொல்லியிருந்தேன். அவர்பேசினாரா, இல்லையா என்பது தெரியவில்லை. ஜி.கே.மணி இந்த அவையில்அடிக்கடி பேசக் கூடியவர். அதிகம் பேசக் கூடியவர். அதற்கு அவருக்கு உரிமைஉண்டு.
இப்போது அவர்கள் போருக்கு ஆயத்தமாகி விட்டார்கள் எனத் தெரிகிறது. நானும்போருக்குத் தயார்தான். அது உங்களுடன் ஒத்துழைக்கு போர்.சென்னையில் இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு என்னென்ன பிரச்சினைகள் வரும்என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
முன்பு அண்ணாநகர், கே.கே. நகர், மறைமலை நகர் ஆகிய நகரங்களை நாங்கள்உருவாக்கினோம். அதனால்தான் நகரில் நெரிசல் பெரிய அளவில்குறைந்தது.இபபோது இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போதும் மக்கள் பாதிக்கப்படாமல்பார்த்துக் கொள்வோம்.
என்னை நம்பி நீங்கள் (பாமக) அந்த மக்களுக்கு வாக்களியுங்கள். அந்தப் பகுதிமக்கள் அனைவரும் ஏழைகள், உழுது பிழைப்பவர்கள் என்பது எனக்குத் தெரியும்.டாக்டர் ராமதாஸுக்கும் தெரியும். இந்த 100 நாட்களில் தமிழக ஏழைகளுக்குஎத்தனையோ செய்த இந்த அரசு, இப்பகுதியில் வாழும் ஏழை மகக்ளையும்பாதிக்காது என்றார் கருணாநிதி.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications