சட்டசபையை கலக்கிய கழுதை!
சென்னை:
கழுதை என்ற வார்த்தையை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் பயன்படுத்தியதால்சட்டசபையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டசபையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார் பேசுகையில்,அதிமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்றுசபையில் இடம் பெறக் கூடாத வார்த்தையை சொல்லி முன்னாள் முதல்வர்ஜெயலலிதா விமர்சித்தார்.
நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, கழுதை என்பது உழைக்கிற பிராணிதான்.எனவே அந்த வார்த்தையை நீக்கத் தேவையில்லை என்று ஜெயலலிதா கூறினார்என்றார் ஜெயக்குமார்.
இதையடுத்து ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி ஒரு வார்த்தையை அவர்பிரயோகித்துப் பேசினார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துகோஷம் போட்டனர்.
சபாநாயகர் இருக்கைக்கு முன் வந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு குரல்எழுப்பினர். அப்போது எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம்பேசுகையில்,
முன்னாள் முதல்வரை, எதிர்க்கட்சித் தலைவரை இவ்வாறு கூறுவது தவறாகும். இதைஅவைக் குறிப்பிலிருந்து நீக்க வண்டும் என்றார்.
அப்போது சபையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி,கழுதை என்ற வார்த்தை ஏற்கனவே அவைக்குறிப்பில் உள்ளது. எனவே நீக்கமுடியாது என்றார்.
அப்போது சபாநாயகர் ஆவுடையப்பன் தனது இருக்கைக்கு வந்தார்.
அப்போது நிதியமைச்சர் அன்பழகன் எழுந்து, முன்னாள் முதலமைச்சரைகழுதையுடன் ஒப்பிட்டு பேசியதுபோல இருந்தால் அதை அவைக் குறிப்பிலிருந்துநீக்கி விடவும் என்று சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.
பின்னர் முதல்வர் கருணாநிதி எழுந்து, அவை முன்னவர் அன்பழகன் கூறியதைநானும் வழி மொழிகிறேன். கழுதை என்ற வார்த்தை இடம் பெறக் கூடாது என்றுகடந்த சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டபோது, அன்றைய சபாநாயகர்அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார்.
ஆனால் அன்றைய முதலமைச்சர் அம்மா எழுந்து, கழுதை என்பது உழைக்கும்சின்னம்தான். எனவே அவைக் குறிப்பிலிருந்து நீக்கத் தேவையில்லை என்றார்.அதையடுத்து சபாநாயகராக இருந்த காளிமுத்துவும், ஆமாம், ஆமாம், கழுதை என்பதுஉழைக்கும் சின்னம்தான். அவைக்குறிப்பில் இடம் பெறலாம் என்றார்.
இப்போது உறுப்பினர் கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விடலாம்.இப்போதைக்கு அந்தக் கழுதையை விரட்டி விடலாம் என்றார்.
இதையடுத்து ஜெயக்குமார் கூறிய வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்கிசபாநாயகர் உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications