கேரள மந்திரி லீலை-தமிழக போலீஸ் விசாரணை?
திருவனந்தபுரம்:
சென்னையிலிருந்து கொச்சிக்குச் சென்ற விமானத்தில், முன்னாள் டிவி செய்திவாசிப்பாளரும் டிவி நடிகையுமான லட்சுமி கோபகுமாரிடம், கேரளபொதுப்பணித்துறை அமைச்சர் ஜோசப் சில்மிஷம் செயதது தொடர்பான வழக்கைதமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.கடந்த 3ம் தேதி கிங்பிஷர் விமானம் மூலம் சென்னையிலிருந்து கொச்சிக்குப் பயணம்செய்தார் லட்சுமி. அப்போது அவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த அமைச்சர்ஜோசப், லட்சுமியிடம் கையை விட்டு சில்மிஷம் செய்தார்.
இதுகுறித்து கேரள முதல்வரின் உத்தரவின் பேரில் கேரள ஐஜி சந்தியா விசாரணைநடத்தி வந்தார். லட்சுமி கோபகுமார், விமானத்தில் பயணம் செய்த பயணிகள்,சென்னை, கொச்சியில் உள்ள கிங்பிஷர் விமான நிறுவன ஊழியர்கள், அமைச்சர்ஜோசப் ஆகியோரிடம் விசாரணை நடத்திய சந்தியா, இன்று அல்லது நாளை தனதுவிசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.
![]() |
விசாரணை நடத்தியபோது, விமானம் பறக்க தொடங்கியபோது, தெரியாமல் எனதுகை லட்சுமி கோபகுமார் மீது பட்டிருக்கலாம் என ஜோசப் தெரிவித்துள்ளதாகத்தெரிகிறது. இதன் அடிப்படையில் அமைச்சர் மீதான புகார் வலுவடைந்துள்ளது.
சந்தியா கொடுக்கவுள்ள அறிக்கையின் அடிப்படையில் ஜோசப் மீது வழக்குப் பதிவுசெய்யப்படும் எனத் தெரிகிறது. மேலும் இந்தச் சம்பவம் சென்னை வான்வெளியில்நடந்திருப்பதால் தமிழக போலீஸாரிடம் வழக்கை ஒப்படைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சந்தியா தனது அறிக்கையை முதல்வர் அச்சுதானந்தனிடம் கொடுத்த பின் ஜோசப்மீதான நடவடிக்கை குறித்து தெளிவாகத் தெரியவரும்.
![]() |
ஜோசப் ராஜினாமா செய்கிறார்?:
இதற்கிடையே செக்ஸ் குறும்பு செய்த ஜோசப் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஆளும் இடதுசாரிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜோசப்பின் காங்கிரஸ் கட்சி பிரிவுக்கு அவரையும் சேர்த்து இரு எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஜோசப் விவகாரம் குறித்து கூட்டணிக் கட்சியினருடன் முதல்வர் அச்சுதானந்தன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றைக்குள் ஜோசப் விவகாரம் ஒருமுடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications