சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை:
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்ந்தப்படுகிறது.
இதுகுறித்து சட்டசபையில் முதல்வர் கருணாநிதி 110வது விதியின் கீழ் இன்று ஒரு அறிக்கை படித்தார். அதன்விவரம்:சத்துணவு மையங்களிலும், அங்கன் வாடிகளிலும் பணியாற்றுவோர் ஊதிய உயர்வு உள்ளிட்ட சிலகோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள்,தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இயன்றவரையில் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இப்போது அரசு நிதியாதார பற்றாக்குறை இருந்த போதிலும் சத்துணவு திட்டம் மற்றும் அங்கன்வாடிகளில்பணியாற்றுவோரின் கோரிக்கையின்படி தற்போது அவர்கள் பெற்று வரும் மாதம் ஊதியத்தில் ரூ. 260உயர்த்தப்படுகிறது.
சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையல்காரர்களுக்கும், அங்கன்வாடிகளில் பணியாற்றும் முதல் நிலைஅங்கன்வாடி உதவியாளர்களுக்கும் தற்போது அவர் பெற்று வரும் ஊதியத்துடன் கூடுதலாக ரூ.120வழங்கப்படும்.
சமையல் உதவியாளர்களும், அங்கன்வாடிகளில் பணியாற்றும் இரண்டாம் நிலை உதவியாளர்களுக்கும் தற்போதுஅவர் பெற்று வரும் ஊதியத்துடன் கூடுதலாக ரூ. 110 வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வு இன்று முதல்நடைமுறைக்கு வரும்.
அதே போல 82,423 ஓய்வூதியதார்களுக்கும் ஊதியம் உயர்த்தப்படுகிறது. இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ. 350கோடி செலவாகும் என அவர் கூறியுள்ளார்.
எம்எல்ஏக்களுக்கு விருந்து:
இந் நிலையில் நாளையோடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைவதையொட்டி இன்றிரவு முதல்வர்அனைத்து எம்எல்ஏக்களுக்கும் விருந்து அளிக்கிறார்.
கிண்டி லீ மெரிடியண் ஹோட்டலில் இரவு இந்த விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அதிமுக, மதிமுக, விடுதலைசிறுத்தைகள் பங்கேற்பார்களா என்று தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications