மிடாஸை மூட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு வேண்டியவர்கள் நடத்திவருவதாகக் கருதப்படும் மிடாஸ் மதுபான தொழிற்சாலையை மூட உத்தரவிட்டதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை அருகே படப்பையில் உள்ளது மிடாஸ் தொழிற்சாலை. இது சசிகலாவின்பினாமிகளால் நடத்தப்படும் ஆலை என திமுக புகார் கூறுகிறது. அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழகம்முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் ஒயின்ஷாப்களிக்கு இந்த ஆலையிலிருந்து மட்டும் தான் பெருமளவில் மதுபானம்வாங்கப்பட்டது.அதிமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில், மிடாஸ் ஆலையில் வருமான வரி சோதனைநடத்தப்பட்டது. இந் நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் மிடாஸ் மதுபானத்தொழிற்சாலையை மூட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொழிற்சாலையின் இயக்குனர்களில் ஒருவரான ராகவன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது மனுவில், மிடாஸ் ஆலையில் மதுபானம் தயாரித்து வருகிறோம். இங்கிருந்துவெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்க ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் பிளான்ட்டை சரி வரஅமைக்கவில்லை என்றும், அனுமதித்த அளவை விட அதிகமாக உற்பத்திசெய்ததாகவும், மற்றும் சில விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் சாட்டி தமிழகமாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.
அதற்குப் பதில் அளிக்காத காரணத்தால் கடந்த ஜூலை 13ம் தேதி 2வது நோட்டீஸ்அனுப்பியது. அதன் பிறகு நாங்கள விரிவான பதில் அனுப்பினோம். அதன் பிறகுமாசுக் கடடுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அறிக்கைதயாரித்தனர்.
அதன் நகலை எங்களுக்குத் தரப்படவில்லை. இதையடுத்து கடந்த 24ம் தேதிஎஙகளது ஆலையை மூடுமாறு மாசுக் கடடுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதற்குதடை விதிக்க வேண்டும் என்று கோரினார் ராகவன்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர்அடங்கியபெஞச், மிடாஸ் ஆலையை மூட இடைக்கால தடை விதித்தனர். வழக்கு விசாரணைஅடுத்த மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைகுள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனுவைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications