மேயரை வீட்டுக்கு அனுப்பியது யார்?: ஸ்டாலின்
சென்னை:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரை வீட்டுக்கு அனுப்ப சட்டம் கொண்டு வந்தது யார் என்றுசட்டபேரவையில் மு.க.ஸ்டாலின், அதிமுக எம்எல்ஏக்களை பார்த்து கேள்வி கேட்டார்.
2006ம் ஆண்டு தமிழ் நாடு நகராட்சி சட்டங்களுக்கான திருத்த மசோதா மீது சட்ட பேரவையில் நேற்று விவாதம்நடைபெற்றது. அதில் மேயரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்க வகை செய்யும் இந்த மசோதாவை பேரவைநிராகரிக்க வேண்டும் என்று கூறி சேகர்பாபு உட்பட அதிமுகவினர் தீர்மானம் கொண்டு வந்தனர்.அப்போது சேகர்பாபு பேசியதாவது,
நேரடியாக மேயர் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் மக்கள் தொடர்பு இருக்காது. குறைகளை மக்கள் கூற இயலாது.சட்டம் இயற்றும் உரிமை மாநகராட்சிக்கு இல்லை. கவுன்சிலர்களை திருப்திப்படுத்துவதில் தான் மேயரின் கவனம்இருக்கும். மேலும் இது அண்ணாவின் கொள்கைக்கு விரோதமானது என சேகர்பாபு கூறினார்.
இதற்கு பதிலளித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரை வீட்டுக்கு அனுப்ப சட்டம் போட்டவர்கள் நீங்கள் (திமுகவினர்ஆரவாரம் செய்தனர்). அதன் பிறகு மேயர் தேர்தலையே நடத்தவில்லை. அண்ணா பற்றி கூறியதில் மகிழ்ச்சி.அண்ணா இருந்தவரை மறைமுக தேர்தல் தான் நடந்தது.
1996ம் ஆண்டு திமுக ஆட்சி வந்ததும் மாற்றம் செய்து மக்கள் தேர்ந்தெடுக்கும் நிலை உருவாக்கப்பட்டது.அஸ்ஸாம், குஜராத், அரியானா, இமாசல பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், மேற்கு வங்கம்,டெல்லி, பீகார், பஞ்சாப், மாராட்டியம் போன்ற மாநிலங்களில் மறைமுக தேர்தல் முறைதான் உள்ளது.
மேயர் ஒரு கட்சியும், பெரும்பாண்மையான கவுன்சிலர்கள் வேறு கட்சியிலும் இருந்தால் மக்களின் அடிப்படைபிரச்சனைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. மக்கள் பணிகள் தேக்கம் அடைகின்றன.
விழுப்புரம், விருதாச்சலம் நகராட்சிகளில் தேர்தல் நடந்த பிறகு இதுவரை முறையான கூட்டங்கள் நடக்கவில்லை.மக்கள் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. விருதாச்சலத்தில் ஒரு முறை கூட எந்த தீர்மானமும் நிறைவேற்றமுடியாத நிலை இருக்கிறது. இவற்றை கருத்தில் கொண்டு இந்த முறை மேயரை கவுன்சில்ர்களை தேர்தெடுக்கும்முறை கொண்டு வரப்படுகிறது என்றார்.
அதன் பிறகு குரல் வாக்கொடுப்பின் மூலம் சட்டம் நிறைவேறியது. அதிமுக உறுப்பினர்கள் கொண்டு வந்ததீர்மானம் தோல்வி அடைந்தது.












Click it and Unblock the Notifications