முல்லைப் பெரியார்: உச்சநீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்படும்-துரைமுருகன்
சென்னை :
முல்லைப் பெரியார் அணையின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம்பிறப்பித்துள்ள தீர்ப்பை அமல்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்துதுரைமுருகன் பேசுகையில், பெரியாறு-வைகை பாசனப் பகுதி விவசாயிகளின்நலன்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.கடந்த பிப்ரவரி 27ம் தேதி உச்சநீதிமன்றம் அணையின் உயரத்தை அதிகரிப்பதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தது. 142 அடி உயரம் வரை தமிழகம் தண்ணீரை தேக்கிவைக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறிய உள்ளது. மேலும், அணையை பராமரிக்கும்பணியையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம்கூறியுள்ளது.
ஆனால் இதை கேரள அரசு ஏற்க மறுக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை முடக்கும்வகையில் அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. அணையின் அதிகபட்ச நீர் இருப்பாக136 அடியாக கேரளஅரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பைஅமல்படுத்தாமல் நழுவ நினைக்கிறது கேரளா.
இந்த சட்டத் திருத்தம் செல்லாது என்றுஅறிவிக்கக் கோரி கடந்த மார்ச் 31ம் தேதிதமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அணையின் உயரத்தைஉயர்த்தும் முயற்சிகளுக்கு கேரள அரசு இடையூறு செய்யாமல் இருக்க அம்மாநிலஅரசுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளது.
பாலாறு விவகாரம்: பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசுதெரிவித்துள்ள கருத்துக்களை பரிசீலிக்காமல் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாதுஎன்று ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டிதெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் விருப்பத்தை புறந்தள்ளி விட்டோ அல்லது சட்டத்திற்குவிரோதமாகவோ எந்த முடிவையும் ஆந்திர அரசு எடுக்காது எனவும் ராஜசேகர ரெட்டிகூறியுள்ளார். இந்தத் திட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் தமிழக அரசிடம்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
பாலாற்றின் குறுக்கே கணேசபுரம் என்ற இடத்தில் அணை கட்டத் திட்டமிட்டுள்ளஆந்திர அரசின் நடவடிக்கை தமிழக மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு இத் திட்டத்தை கைவிடுமாறு ஆந்திரஅரசுக்கு அறிவுறுத்து மாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்திலும் வழக்குதொடரப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி ஊராட்சித் தறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்,உயர் கல்வி அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஹைதராபாத் சென்று ஆந்திரமுதல்வரை சந்தித்த போது பாலாற்று அணை தொடர்பான தமிழக அரசின் கவலையைநேரிலும் எடுத்துரைத்துள்ளனர் என்றார் துரைமுருகன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications