நான் திராவிடன் தான்: கருணாநிதிக்கு விஜயகாந்த் பதில்
திருச்செங்கோடு:
நான் திராவிடன் தான், எனது கட்சி திராவிடக் கட்சிதான் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், முதல்வர்கருணாநிதிக்குப் பதில் அளித்துள்ளார்.
திராவிடம் என்ற பெயரை கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லாம் திராவிடர்களா என்று முதல்வர் கருணாநிதி கேள்விஎழுப்பியிருந்தார். தேமுதிக கட்சியின் கொள்கை என்ன என்று விஜயகாந்த்துக்குத் தெரியுமா என்றும் அவர்கேட்டிருந்தார்.இதற்கு திருச்செங்கோட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விஜயகாந்த் பதிலளித்தார். நிகழ்ச்சியில் அவர்பேசுகையில், 100 நாள் சாதனை என்கிறார்கள். கலைஞர் கையெழுத்துப் போட்ட திட்டங்கள் அனைத்தும் 5கோடி தமிழர்களுக்கும் போய் சேர்ந்த பிறகு தான் அதை சாதனை என்று கூற முடியும்.
நான் ஆரம்பித்தது திராவிடக் கட்சி இல்லை என்கிறார் கலைஞர். நான் திராவிடன் என்பதால் தானே எனதுதிருமணத்திற்கு கலைஞர் வந்தார். தமிழ்நாட்டில் வாழ்பவன் திராவிடன் இல்லை என்றால் வேறு யார் திராவிடன்?
ஆரம்பத்தில் திராவிடனாக தெரிந்த நான் கட்சி ஆரம்பித்ததும் திராவிடன் என தெரியாமல் போய் விட்டதுஎப்ப்டி? எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்த போது திராவிடன். அதிமுக ஆரம்பித்த பிறகு திராவிடன் இல்லை என்றுகூறியவர் தான் கலைஞர்.
திராவிடக் கட்சி எனக் கூறும் திமுக எப்படி வட நாட்டுக் கட்சிகளுடன் கூட்டனி வைத்துக் கொள்கிறது?சுயலாபத்துக்காக திராவிடத்தை பயன்படுத்தி வருகிறார் கலைஞர்.
சட்டசபையில் ரசாபாசம் வரக்கூடாது என்பதற்காக நான் அமைதியாக இருக்கிறேன். நடப்பவை நன்மையாகநடக்க வேண்டும். அங்கு இரு கட்சியினரும் சண்டை போடுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். என்னைவிமர்சித்தால் பதிலுக்கு விமர்சிப்பேன். பின் வாங்க மாட்டேன் என்றார் விஜயகாந்த்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications