ஒரே கட்டமாக 27% ஒதுக்கீடு வழங்க முடியாது: அர்ஜூன் சிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை ஒரே கட்டமாக வழங்குவதுசாத்தியம் இல்லாதது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.

சென்னை வந்த அர்ஜூன் சிங் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில், உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை ஒரே கட்டமாக வழங்க கூட்டணிக் கட்சியினர் கோருகிறார்கள். அதுசாத்தியம் இல்லாதது.

3 பிரிவுகளாக பிரித்து வழங்கும் முடிவு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்விவாதித்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தான் எடுக்கப்பட்டது. இந்தஅமைச்சரவைக் கூட்டத்தில் தென்னகத்தைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளின் மத்தியஅமைச்சர்களும் இருந்தார்கள்.

இடஒதுக்கீட்டை ஒரே கட்டமாக அமல்படுத்த மத்திய அரசு தவறி விட்டதாக குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தோல்வி என்று கூற முடியாது.கடினமான ஒரு பிரச்சினைக்கு இப்படித்தான் தீர்வு காண முடியும்.

வந்தே மாதரம் பாடலை பள்ளிக்கூடங்களில் கட்டாயம் பாட வேண்டும் என்றுமத்திய அரசு வலியுறுத்தவில்லை. தேசியப் பாடலை பாடுவதை கட்டாயம் என்றுகூற முடியாது. இதை பாஜக தேவையில்லாமல் பிரச்சினையாக்கி வருகிறது என்றார்அர்ஜூன்சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+