பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தது; சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.இதையடுத்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
திமுக அரசு பதவியேற்ற பின்னர் முதலாவது பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22ம்தேதி தொடங்கியது. அன்று நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதன் மீதான விவாதம் 24ம் தேதி முதல் தொடங்கியது.பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஜூலை31ம் தேதி பேசினார். விவாதத்தின் இறுதியில் ஜூலை 31ம் தேதி நிதியமைச்சர்அன்பழகன் பதிலுரை ஆற்றினார்.
இதையடுத்து பல்வேறு அரசுத்துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம்ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 31 நாட்கள்இக்கூட்டத் தொடர் நடந்துள்ளது.
நேற்று விவாதங்கள் முடிந்து சபையை ஒத்திவைப்பதற்கு முன்பு சபாநாயகர்ஆவுடையப்பன் பேசினார். இதுவரை நீங்கள் பேசியதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போது நான் பேசுவதை நீங்கள் கேளுங்கள் என்று சபாநாயகர்தனது பேச்சை ஆரம்பித்த போது , சபையில் சிரிப்பலை எழுந்தது.
தொடர்ந்து ஆவுடையப்பன் பேசுகையில், இந்த அவையை தலைமை தாங்கி நடத்திச்செல்லும் வாய்ப்பை எனக்கு அளித்த முதல்வருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியபோது சபாநாயகரின் கண்கள் கலங்கின. சிலவிநாடிகள் அவரால் பேச முடியவில்லை. கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு தொடர்ந்து பேசினார். அதன் பின்னர்சபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத் தொடல் மொத்தம் 23 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுநிறைவேற்றப்படட்ன. 60க்கும் மேற்பட்ட மானியக் கோரிக்கைகள் தாக்கல்செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
பரபரப்பாக நடந்து முடிந்துள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு புயல்கள்கிளம்பி கூட்டத்தொடரை சூடாக்கின. கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே அதிமுகஉறுப்பினர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டனர். முதல்வரைதாக்க முயற்சியும் நடந்தது.
எதிர்க்கட்சித் தலைவராக தனி ஆளாக சபைக்கு வந்து ஜெயலலிதா நீண்ட நேரம் பேசிபுதிய பரபரப்பை ஏற்படுத்தினார். அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தை கட்சிகள்அதிக அளவில வெளிநடப்புகளில் ஈடுபட்டனர். படு சூடான விவாதங்கள்நடந்தாலும் கூட பெரிய அளவில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறவில்லை.
இன்று லண்டன் பயணம்:
இதற்கிடையே நைஜீரியாவில் நடைபெறவுள்ள 52வதுகாமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டில் சபாநாயகர் ஆவுடையப்பன்கலந்து கொள்ளவுள்ளார்.
இதற்காக அவர் இன்று லண்டன் புறப்பட்டுச் செல்கிறார். அங்கிருந்து அவர் நைஜீரியாசெல்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications